Friday, July 16, 2010

எங்கே வாழுது நீதி?

கனவுகள் சிதைக்கப்பட்ட


சின்னவள் சொல்லும்

விசித்திர உண்மை இது

முள்ளிவாய்க்கால் முற்றுப்பொற்றுவிட்டது – என

மார்பு தட்டும் சிங்களங்கள் மத்தியில்

கொடிய வெறியுடன் அலையும்

பிணம் தின்னிகளாய் நம்மவருமா?



சிறையில் அடைக்கப்பட்ட

மொட்டுகளை விடுவித்து

தினமும் வேதனைப்படுத்தும்

எம்மவருக்கு எதற்கு முகத்திரை…..

உன்னால் ஒடுக்கப்பட்ட

என்போன்றவர்களின் ஒப்பாரி குரல் இது

உண்மைகள் அழியவில்லை உறங்குகிறது

உரத்திடும் காலம் வரும் வரை







புத்த மதத்துக்கு புத்தி பேலித்தது

செத்து கிடக்கும் எம்மவர் பிணங்களின்

ஆடைகளை கிழிப்பதில்…..

எம்மவருகோ புத்தி பேலித்தது

சிதைந்து போனதை ரசிப்பதில்…….

நெந்துகிடப்பதை பந்தாடுகிறது-அரசியல்

கனவுகள் சிதைக்கப்பட்ட

சின்னவள் சொல்லும்

விசித்திர உண்மை; இது







உலகம் மறந்தது – என்னை

உலகத்தலைவர்கள் மறைத்தனர் - என்துயரை

அப்போது தான் மனிதநேயம் மரணித்துப்போனது

கூட்டில் அடைக்கப்பட்ட குருவியை

குத்திக்கிழிக்கும் கொடியவிசமிகள்

போர்என்று வந்த பிணம்தின்னிகளும்

பெண்களை சிதைக்கும் கொடியவிசமிகளும்

என்ன வித்தியாசம்

என்போன்றவர்களின் முனங்கல்கள்

இன்னமும் ஒயவில்லை……..

என் உறவுகளே……

கனவுகள் சிதைக்கப்பட்ட

சின்னவள் சொல்லும்

விசித்திர உண்மை;-இது





முகத்திரைகளை கிழித்து-எம்மவர்

என்பக்கம் திரும்பி

ஒருமுறையாவது கேளுங்கள்

இதில் எங்கே வாழுது நீதி;?







சுவிஸ்ஸிலிருந்து குட்டிசுபா

No comments:

Post a Comment