Tuesday, July 13, 2010

இணைந்த உள்ளங்கள்

06:00 மணி அலார்ம் அலரது...டு.டு.டு...கண்களை மெல்லமாக திறந்தேன். கடிகாரத்தை பார்த்தேன்...ம்.ம்.ம்..இன்னும் பத்து நிமிடங்கள் தூங்கலாம் என்று அலார்மை ஓப் பன்னிவிட்டு மீண்டும் எனது கண்களை மூடினேன்....


"ஐயோ..07:00 மணி ஆகிவிட்டதே...கொஞ்சம் நேரம் தானே தூங்கினேன்"...07:33க்கெல்லாம் ஸ்டேஷனில் இருக்கனுமே



"பரீட்சைக்கு லேட்டாக போகவும் கூடாது...சரி எல்லாம் அவசர அவசரமாக செய்யனும்!"



"ஏய் அனுஷா என்னடி இப்படி மூச்சு வாங்கிற?", கேட்டாள் மதுமிதா.

"ஆமா மதுமிதா, இன்று ரொம்ப லேட்டாகிவிட்டது அது தான் ரயிலைப் பிடிக்க ஓடி வந்தேன்".

"என்ன மாதிரி பரீட்சை...படிச்சியா அனு?..ம்..ம்.."என்று அனுஷா முணுமுணுத்திக் கொண்டிருந்தால்...."

சும்மா ஒரு தடவை புத்தகத்தை வாசித்தேன் அவ்வளவுத்தான்!"

"பாஸ் பண்ணுவோம் மது...இருவரும் இந்த பரீட்சையில் பாஸ்பண்ணுவோம்....", நம்பிக்கையோடு கூறினாள் அனுஷா.



காமா காமா...


எனக்கு 20 உனக்கு 18



மன்னிக்கனும்...ஆமாங்க உங்களைத்தான்...என்னுடைய கதையை கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்...ஆனால் பாருங்க என்னை இன்னும் அறிமுகம் படுத்தவில்லையே...என் பேரு அனுஷா, பல்கலைகழகத்தில் சட்டம் படித்துக்கொண்டிருக்கின்றேன்.



மதுமிதா தான் என்னுடைய உயிர்தோழி, அவளும் நானும் அதே வகுப்பில் படிக்கின்றோம்.



இதைவிட பெரிசா எதுவும்...இல்லைங்க... சரி மீதி கதைய கேளுங்க...



09:00 மணிக்கு international law படிப்பு தொடங்கப்போகின்றது.எல்லாரும் ஒரே டென்சனோடு இருக்கின்றார்கள்.



டீச்சர் பரீட்சையின் மார்க் சொல்லப்போறாங்க...



மதுவும் நானும் ஒரே பார்வையோடு மேரி டீச்சரைப் பார்த்துக்கொண்டிருந்தோம்...



மேரி டீச்சர் புள்ளிகளை சொல்ல ஆரம்பித்தார்... வகுப்பறையே அமைதியாக இருக்க...அவரது குரல் மட்டும் சத்தமாக ஒலித்தது....



சபஸ்ரியான்....6

ஹெரல்ட்........5

ஸாரா.............4

றோய்..............7

ஜெஸ்மைன்....5



என்று ரிச்சர் சொல்லிக்கொண்டே போனார்....



"என்னடி அனு இப்படி குறைவாக எடுத்து இருக்கின்றார்கள், எனக்கு இனி நம்பிக்கை இல்லைடி..இந்த பரிட்சையில் பாஸ்பண்ணாட்டி அம்மா, அப்பா என்னை ஊருக்கே அனுப்பிடுவாங்க.....நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே ஐரோப்பாவில் படிக்கின்றோம்.. இலங்கையின் படிப்பு, ஐரோப்பாவின் படிப்பு எவ்வளவு வித்தியாசமனது என்று நமக்குத்தான் தெரியும்", என்று மது கவலையோடு ரகசியமாகப் பேசினாள்...



"கொஞ்சம் பேசாம இருடி மது...எனக்கு டீச்சர் சொல்றது கேட்கவில்லை...."

என்று அவளை சமாதானப்படுத்தினேன்...



மதுமிதா..........6

அனுஷா..........9



என்று டீச்சர் சொன்னதும்...



"யெஸ்...யெஸ்...யெஸ்...என்று நாங்கள் இருவரும் சத்தம்போட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தோம்..!



எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம், சொல்லமுடியாத ஒரு சந்தோஷம்! இரவில் தூங்காமல்...படித்து படித்து....அதுவும் பரீட்சையில் பாஸ் பண்ணினால் அது ஒரு தனி சுகம் அல்லவா ! "



"வா மது....இனி நமக்கு கோடைகால விடுமுறை தொடங்கவிட்டது.

அடுத்த வருடத்திற்கு நாங்கள் பாஸ்..இனி எங்களுக்கு ஹொலிடே", என்று சந்தோஷத்துடன் நான் சொல்ல.. மது என்னைக் கட்டி அணைத்துக்கொண்டாள்....



இருவரும் சிரித்துக்கொண்டே வெளியில் சென்றோம்...



கொலேஜ் கேட்டில் ஒரே கூட்டமாக இருந்தது...

நானும் மதுவும் அங்கே சென்றோம்...

அங்கே என்னத்தான் நடக்கிறது.... கூட்டத்தை நெருங்கி போனோம்.....



அங்கே ஒரு பையனை பலபேர் சேர்ந்து அடித்துக்கொண்டிருந்தார்கள், அவனுடைய புத்தகதை பறித்து உதைப்பந்தாட்டமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்...



பார்க்க ரொம்ப கவலையாக இருந்தது... மற்ற ஸ்டூடண்ட்ஸ் அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்..



இதைப்பார்த்துக்கொண்டிருக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை...என்னை அறியாமலே...."நீங்களும் மனிதர்கள் தானே? ஏன் யாருமே உதவி செய்யமாட்டீங்களா..பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே.., சும்மா பார்த்து சிரிக்கத்தான் தெரியும் போல இந்த ஸ்டூடண்ட்ஸுக்கு". என்று எனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினேன்...



"அனுஷா பேசாமல் இரு", என்று மது மெல்லமாக சொன்னாள்..

"இந்த வம்பு உனக்கு தேவையில்லை, வா வீட்டுக்கு போவோம் இங்கே இருக்கவேண்டாம்" என்று அறிவுரை கூறினாள்...



"சும்மா இரு மது, இது உனக்கே நல்லா இருக்கா? பாவம் அவன், அவனும் நம்ம மாதிரி ஒரு மாணவன் தானே".



கூட்டம் அதிகரித்து...கல்லூரி மாஸ்டர்மார், டீச்சர் மார்கள் எல்லாரும் அங்கே வந்தார்கள்.

"இங்கே என்ன நடக்குது"? என்று கேட்டார்கள்.

"ஒன்றுமே இல்லையே"....என்று மாணவர்கள் சொன்னார்கள். "இல்லை"...என்று நான் சொன்னேன்....சொல்லும்போது மது எனது காலில் ஒரு மிதி மிதித்தாள்...அதற்கான அர்த்தம் எனக்கு புரிந்தது.. அதற்குள்..



"என்ன அனுஷா...இங்கே என்ன நடந்தது?", மாஸ்டர் என்னிடம் கேட்டார். "ஒன்றும் இல்லை மாஸ்டர்", என்று நானும் பொய் சொன்னேன்..

"எல்லாரும் வீட்டுக்கு போங்க" என்று சிசிலியா டீச்சர் கடுமையாக சத்தம் வைத்தார்...



கூட்டம் மெதுவாகக் கலைந்தது...

அப்போ அந்த மாணவர் நிலத்திலிருந்து எழும்புவதற்கு முயற்சி செய்தார்.

நானும் மதுவும் அவனுக்கு உதவி செய்தோம்...

அவனுடைய கண்ணாடியும் உடைந்துவிட்டது, உடுப்பும் ஒரே மண்ணாக இருந்தது...



"நீங்கள் அப்படி என்ன அந்த பசங்களுக்கு செய்தீர்கள்? இப்படி உங்களைப் போட்டு அடிக்கும் அளவுக்கு...", மது அவனிடம் கேட்டாள்..



"இது எல்லாம் தினமும் நடக்குதுங்க, நான் அவர்களுக்கு ஒரு விளையாட்டு பொம்மை மாதிரி, அவ்வளவுதான்", என்று அவன் கவலையாகக் கூறினான்.



கீழே கிடந்த அவன் புத்தகத்தை எடுத்த அவனிடம் தந்தேன்.

"நன்றிங்க", என்று கண்ணுக்குள் கண்ணீருடன் சொன்னான்.



"அந்த பசங்களுக்கு வேறு வேலை இல்லைப்போல அதுதான் உங்களை உதைப்பந்தாட்டம் போல உருட்டுகிறார்கள்".. அது சரி... "உங்கள் வீடு எங்கே", என்று அவனிடம் கேடேன்?



அவன் இருக்கும் இடத்தைச் சொன்னான்...



"ஓ அங்கேயா இருக்கின்றீர்கள், அப்ப எங்களுடைய வீட்டு பக்கத்தில் தான் இருக்கின்றீர்கள். அப்ப வாங்க எல்லாரும் சேர்ந்தே வீட்டுக்கு நடக்கலாமே... இல்லையா மது?", என்று அனுஷாவிடம் கேட்டேன்... சரி, என்று மது தலையாட்டினாள்...



"எனது பெயர் தீபன்.....ஓ..எனது தோழி மதுமிதா, நான் அனுஷா!"

என்று ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம்...

"இங்கே தான் நாங்களும் படிக்கின்றோம்", என்று மது கூறினாள்.



மூவரும் வீட்டுக்கு சென்றோம். தினமும் மூவரும் கதைப்போம். நட்பு மலர் எங்களுக்குள் வளர்ந்தது..



படித்தோம், சிர்த்தோம், மகிழ்ந்தோம்.

சிறிது காலத்தில் நானும், மதுவும், தீபனும் பிரிக்க முடியாத ஆறுயிர் நண்பர்களானோம்....



ஒரு நாள் நானும் மதுவும் கதைத்துக்கொண்டிருந்த போது.... "மது எனக்கு ஒன்று ஆச்சரியமாக இருக்கின்றது...என்றேன்...

என்ன அனுஷா?...சொல்லு... என்றாள் மது..

பாரு இப்ப நானும் நீயும், நமக்குள் இருக்கும் நட்பு அழமானது. இதை யாரால் பிரிக்கவும் முடியாது. நான் ஒன்று நினைத்தால் அது நீ சொல்வாய் அப்படித்தான் நம்முடைய நட்பு. நான் சோகமாக இருந்தால் நீ என் முகத்தில் சிரிப்பு என்ற பூவை வளர்ப்பாய். நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லையடி உன்னை என் தோழியாக அடைவதற்கு.", என்று என் மனதைத் திறந்து அவளிடம் பேசினேன்...



இதைக்கேட்ட மதுவின் முக்தத்தில் கண்ணீர்துளிகள்..

"ஏய் மது என்ன ஆச்சு?...



இல்லைடி நான் தான் கொடுத்துவைத்தவள் உன்னை என் நண்பியாக அடைந்தததற்கு...நட்பு என்பது எல்லாருக்கும் கிடைக்காது, நாங்கள் இருவரும் கொடுத்தவைத்தவர்கள் தான்....உண்மைத்தான்", என்று மது கூறினாள்.



ரோஜாக்களே...


பிரியமானதோழி...



10 வருடங்களுக்கு பின்.......



"ஐயோ இந்த பிள்ளையோடு நான் படும் அவஸ்தை, என்னங்க பாருங்களேன்.கடிதம் வந்திருக்கின்றது இவள் அதோடு விளையாடிக்கொண்டிருக்கின்றாள்."



"ஏய் ஷாலினிக்குட்டி அம்மா கிட்ட அந்த கடிதத்தை கொடு..."

"சரி அப்பா", என்று சொல்லி கடிதத்தை தாயிடம் கொடுத்தாள் ஷாலினி...



ஆமா யார் என்று யோசிக்கின்றீர்கள்...அபியுடைய அம்மா அனுஷா தான் லெட்டர் போட்டிருக்காள்...அனுஷாவுக்கு திருமணம் முடிந்து 3 வருடங்களாகின்றது. அவளுக்கு ஒரு பெண்குழுந்தை.

அனுஷாவும், மதுமிதாவும் வக்கீலாக வேலைசெய்கின்றார்கள். அதேப்போல் மதுமிதாவுக்கும் திருமணம் முடிந்து 3 குழந்தைகள் இருக்கின்றது.

தீபனை பற்றி ஒரு தகவலும் இல்லை. அவன் எங்கே இருக்கின்றார் என்று கூட மதுவுக்கும், அனுஷாவுக்கும் தெரியவில்லை.



அனுஷாவும் மதுவும் கொலேஜ் நாளிலிருந்து இன்று வரை பிரிக்க முடியாத தோழிகளாகவே நட்பில் தொடர்கிறார்கள்.... இருவரும் இன்னும் அதே பாசத்தோடு பழகிக்கொண்டிருக்கின்றார்கள்.



ரிங்க்...ரிங்க்...ரிங்க்...என்று தொலை பேசி அடித்தது..



"ஹெலோ...ஹெலோ மது உனக்கும் கடிதம் வந்ததா? அனுஷாவின் குரல் ஒலித்தது...

ஆமாடி பல்கலலகழகத்திலிருந்து வந்தது... என்றாள் மது...



Class '95 reunion நிகழ்ச்சி செய்யப்போகிறார்கள். சந்தோசமாக இருக்குடி" ..என்றாள் அனுஷா..



"நம்முடைய நண்பர்கள், ரீச்சர்ஸ், மாஸ்டர்ஸ் மீண்டும் சந்திக்கலாம். நாளை 18:00 மணிக்கு கொலேஜில் சந்திப்போம்"...கட்டாயம் வா...



ஓகேடி... கட்டாயம்...



மறுநாள் நிகழ்ச்சியில்...



எல்லாரும் ஒருவரையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். "ஏய் மது அந்த பக்கம் பாரேன்.. அவங்க தானே சாரா...ஹி..ஹி..வித்தியாசமே இல்லைடி", மது சிரித்துக்கொண்டு சொன்னாள்.



"Welcome everyone to the Class 1995 reunion!", நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.. அன்று அவர்களுக்குக் கற்பித்த ரீச்சர்ஸ், மாஸ்டர்மார்கள் வந்து மைக்கில் கதைத்தார்கள்.



"அன்பான மாணவ, மாணவிகளே.....இப்ப ஒரு முக்கியமான மாணவர் மேடைக்கு அன்போடு அழைக்கப்போகின்றேன்.. இவரை நாங்கள் Class of 1995 சிறந்த மாணவராக தேர்ந்தெடுத்து இருக்கின்றோம். எங்கே உங்கள் அன்பு மிக்க கரதோஷத்தினை அள்ளி வழங்குங்கள்... சிறந்த மாணவரான தீபன் அவர்களுக்கு!"



அனுஷாவும் மதுவும் வாயை திறந்துக்கொண்டே தீபனை பார்த்தார்கள். "என்னடி இது தீபனா?", அனுஷாவிடம் கேட்டாள்... மது ....



"ஓ..ஓ...நம்பமுடியவில்லையே. அப்ப அப்படி இருந்தார் இப்ப இப்படியாகிவிட்டார்ர். டையும் கோட்டும் போட்டுக்கொண்டு அழகாக இருக்கின்றார் இல்லையா", என்று மது அனுஷாவிடம் சொன்னாள்.



"அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவுத்துக்கொள்கின்றேன்", என்று தீபன் அவருடைய பேச்சை ஆரம்பித்தார்...



"கொலேஜ் வாழ்க்கை என்பது ஒரு காலம்.

அதிலே நாங்கள் நிறைய பேர்களை சந்திக்கின்றோம்.

அனைவருடைய ஆதரவுக்கு என்னுடைய கொலேஜ் காலத்தில் நான் நன்றி சொல்வதற்கு கடமைப்பற்றிருக்கின்றேன்.

எனது பெற்றோர், தங்கை, ரீச்சர்ஸ், மாஸ்டர்ஸ் எல்லோருக்கும் எனது நன்றிகள்!



எனது கொலேஜ் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு பேர் இருக்கின்றார்கள். அவர்களால் தான் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்... கொலேஜில் என்னை தினம்தோறும் அடிப்பார்கள், பசங்கள் என்னை ஒரு விளையாட்டு பொம்மையாகக் கருதி விளையாடுவார்கள்.. அப்பாவியாக இருந்த எனது புத்தக்த்தை வீசிக்கொண்டு என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்...



ஒருநாள் இதெல்லாம் எனக்கு பொறுக்காமல் போய்விட்டது. அதனால் அந்நாளில் .. இன்றோடு தற்கொலை பண்ணிவிடலாம் என்று முடிவு செய்தேன்... நான் மரணத்தை தேடும்போது இவர்கள் இருவரையும் தேவதைகள் போல் என் வாழ்க்கையில் வந்து எனக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைத்தார்கள்..



நட்பு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி.... நட்புக்கு இனம், மொழி, மதம், ஆண் பெண் பிரிவு கிடையாது! நாங்கள் பிரிந்திருந்தாலும் அந்த நட்பு மனதில் இருக்கும்! நட்பு என்பது அழியாத ஒன்று.. எனது இரு தோழிகள் எனக்கு கிடைத்திருக்காமல் இருந்தால் நீங்கள் என்னை இந்த மேடையில் உயிரோடு பார்த்திருக்கவேமுடியாது.", என்று உணர்ச்சி பொங்க...தீபன் கூற...



"யார் அவர்கள்....சொல்லுங்கள்"...."யார் அவர்கள்..சொல்லுங்கள்" .. என்று மேடையில் கூக்குரல் ஒலித்தது...



"சரி சொல்கின்றேன்", என்று தீபன் சந்தோஷத்துடன் சொன்னார்.

"அனுஷாவும், மதுமிதாவும் தான் அந்த தேவதைகள்", மகிழ்வோடு தீபன் சொன்னார்.



மகிழ்ச்சியில் அவர்களும் இருக்கைகளை விட்டு எழுந்து நின்றார்கள்...



அனுஷா.., மதுமிதா.., தீபனனயும் பார்த்து எல்லாரும் கைத்தட்டினார்கள்...மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்...



அனுஷாவுக்கும், மதுமிதாவுக்கும் இப்போ தான் புரிந்தது தீபனின் ஆழமான நட்பு....அவனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டார்கள்....



அனுஷா, மதுமிதா, தீபன்... பழைய நண்பர்கள் மீண்டும் கூடினார்கள்...

அது ஒரு மகிழ்ச்சியான பொழுது...



நட்புக்கு என்றுமே விலையில்லை... நட்பு அவர்கள் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சம்...இணைந்த உள்ளங்கள் ஒன்று சேர்ந்தன.....!!

No comments:

Post a Comment