Tuesday, July 13, 2010

இசையும் கதையும்.. "பூமகள்"

"பூமகள்"















இசையும் கதையும்....



"கலங்காதிருமனமே! உன்


கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!" கண்ணதாஸன்...



அந்தக்கதையின் ஆரம்பமே அந்தக்கவிஞனின்

நம்பிக்கைக் கீற்றோடு ஆரம்பித்திருந்த

அந்தக்கதாசிரியர் மனதில் உதித்த அந்தக்கதையை

அவன் எத்தனை தடவை வாசித்திருப்பான்!



அந்தக் கதைக்குள் அவன் தன்னைப்பார்த்தான்!

இந்தக்கதை என்மனத்துள் இத்துணைதூரம் இடம் பிடித்துவிட

என்ன காரணம்...என்ன காரணம்...ஏனிந்த மாற்றம்...



என்னுள் பதிந்த கதைக்குள் நானா...

இல்லை...அந்தக்கதையாசிரியர் மனத்துள் நானா...



புரியாத பல புதிர்களுக்கு பதில்தந்த அந்தக்கதை...

இது என்ன விந்தை...என்ன விந்தை..



சந்தைக்கூட்டத்து மந்தைக்கூட்டத்துள்.....

இவன் எப்படி அகப்பட்டான்...அந்த வலைக்குள்

இவன் எப்படி அகப்பட்டான்...



ஆச்சரியமாய் இருக்கிறதே....

அந்தக்காதல்கதையின் கருவே அவனாகவல்லவா தெரிகிறது...



"நினைவுச்சின்னம்" அழகான தலைப்போடு

நினைவுகளைச் சுழலவைத்த அந்தக்கதை....



தன்னினைவுகளோடு பின்னோக்கி அவனனை இழுத்துச்செல்ல............



'கவிதா! இங்கை வாயேன்! இதைக்கொஞ்சம் பாரேன்'...

என்றான் அறிவழகன்!...

'என்ன! என்ன! யாராவது நல்ல கவிதை எழுதியிருக்காங்களா....

இல்லை....யாருடையதாவது நல்ல கதை வந்திருக்கா.....

இல்லை ஐயாவுக்கு நல்ல மூடு வந்திருக்கா.'...



'என்னங்க!....என்னங்க!...

கையில அலுவலாய் இருக்கேன்!...

சொல்லுங்க!.....கேட்டுக்கிறன்'......என்றாள் கவிதா....சமையல் கட்டில்

இருந்துகொண்டே...



"ஏ வெங்காயம்!...அதைவைச்சிட்டு அப்படியே வாடி இங்கே....

வந்து பாரு.....புரியும்....வந்து பாரு கவிதா!"....

என்று ஏக்கத்தோடும் பரபரப்போடும் அழைத்தான் அவன்..



"ம்.....ம்....இனித்தாமதித்தால் ஐயாவுக்கு கோபம் பொத்துக்கிட்டு

வந்திடும்....கோபத்த இறக்குறதென்றால் ரொம்பக்கஷ்டம்....

சாமி மலையேறிட்டால் காடுதாங்காது.."..என்று பொய்க்கு முணுமுணுத்தவாறு

கவிதா...அவனை நோக்கி சென்றாள்....



"இங்க பாரு கவிதா!...எவ்வளவு அற்புதமான கவிதை....

நம்ம இறையன்பு எவ்வளவு அற்புதமாய் விளக்கியிருக்கிறாரு...

பாரு....பாரு."..



அவளுக்கும் கவிதையில் கதையில் நிறைந்த ஆர்வம் இருப்பதை

அவளுக்குள் இருக்கும் அவனுக்குள் தெரிந்ததே..

இன்னும் சொல்லப்போனால்.....

அவனுக்கும் அவளுக்கும் காதல்மலர்ந்ததே...இந்தக்

கலாரசனைகளால்தானே....



"என்னங்க...கையெல்லாம் ஈரமாயிருக்கு...நீங்க படியுங்க...

நான் கேட்டுக்கிறேன்....என்றாள்...முகத்தில் வடிந்துகொண்டிருக்கும்

வெயர்வையை சேலைத்தலைப்பால் துடைத்தபடியே.......



"வாடி! வந்து மடியில் உட்காரு."..என்றபடி அவளை

இழுத்து தன் மடியில் உட்காரவைத்தான் அவன்...



அவளும் நாணங்கொண்டு சிணுங்கியபடியே...'.ம்..சரி...

படியுங்க."..என்றாள் அவள்....



அவள் கண்களின் அழகைப்பருகியபடியே...

சட்டென்று இதழால் முத்தம்பதித்து....

அவளை இறுகப்பற்றியபடியே....



"இந்தா...புத்தகத்தை விரித்துப்பிடித்துக்கோ.....

நான் படிக்கிறேன்"....என்றபடி ஆரம்பித்தான்....



அவளுக்கும் அவனுடைய ஸ்பரிஸம் தந்த கதகதப்பு.....

"ம்......படியுங்களேன்"..என்று சிணுங்கினாள் அவள்..



"பாரு....என்ன அழகா இந்தக்கைக்கூ கவிதைக்கு

விளக்கம் கொடுக்கிறாரு"........



"கீழே செல்லச் செல்ல...மேலே போகிறது வால்- ஒரு திமிங்கிலம்"

இது கைக்கூ...கவிதை...



"இதுக்கு எப்படி விளக்கமளிக்கிறார் அழகாக."...

"ம்...மேல படியுங்களேன்.'....என்றாள் அவள்.....



இறையன்புவின் கட்டுரையென்றால் அது ஒரு தனியழகு....

என்பது அவனுக்கும் அவளுக்கும் தெரிந்த ஒன்றுதான்...



இன்னும் ஒருபடி அவளுக்கு அவருடைய எழுத்தில்

ஓர் பிடிப்பு....".படியுங்களேன்."...அவசரப்படுத்தினாள் அவள்...



"கவனமாகக் கேளு."......என்று தொடர்ந்தான் அவன்...



"திமிங்கிலத்திற்குப்பொருந்துவது மீனுக்கும் பொருந்தும்...

திமிங்கிலம் என்பது சக்தியைக்குறிக்கிறது...



திமிங்கிலத்தின் தலை கீழே போகப்போக

வால் மேலே வருகிறது.....



திமிங்கிலம் தான் என்றில்லை...

நிர்வாகிகளும் அப்படித்தான்....

அதிகாரமும் அப்படித்தான்...



தலை பணிவாக இருக்கிறது...

வால் துள்ளுகிறது...



அதுமட்டுமல்ல...

தலை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்...

வால் மேலே வர வாய்ப்பில்லை...



சில நேரங்களில் நல்ல விசயங்கள்

சொல்லப்படாததாலேயே....

தீய விஷயங்கள் முன் நிற்கின்றன....



நல்ல மனிதர்கள் வெளிச்சத்திற்கு

வரக்கூச்சப்படுவதாலேயே

எடுபிடிகளாக இருக்கவேண்டியவர்கள்

கெடுபிடி செய்கிறார்கள்...



உண்மைகள் உரத்துச் சொல்லப்படவேண்டும்..



இல்லாவிட்டால் பொய்களின் நாட்டியத்தின்

இரைச்சலில்....

உண்மை நாடுகடத்தப்படும்...



தலை சிந்தனைக்குப்பிறப்பிடம்...

வால் கழிவுகளுக்கு அருகில் இருப்பிடம்..



வாலும் தேவையான உறுப்புத்தான்..

ஆனால் நிட்சயம் தலையின் பணியை

அது செய்ய முடியாது...



பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் வால்

மறைந்து போகிறது...மறைந்து போக வேண்டும்...



இருக்கிறதே என்று எல்லா நேரமும்

வாலை உயர்த்திக்கொண்டோ

உபயோகப்படுத்திக்கொண்டோ

இருக்க முடியாது.....



பல்லியின் வாலை நறுக்கினால்....

அது துள்ளிக்கொண்டே இருக்கிறது...



தலையை நறுக்கினால் அது சப்தமில்லாமல்

மவுனித்திருக்கிறது..



வாலைத்தண்டித்தால்....

அது கத்தும்...துள்ளும்..கூச்சலிடும்....



தலையோ தான் தண்டிக்கப்பட்ட

காரணங்களை அலசி ஆராயும்...



திறமை மிகுந்தவர்கள் எல்;லாரும்

மவுனத்தை அடைகாக்க ஆரம்பித்துவிட்டார்கள்...



அதனால் இப்போது அரைகுறை சத்த

சாம்ராஜ்யம் நடந்துகொண்டிருக்கிறது......



ஊதுவத்திகள் மவுனமாக இருக்கின்றன...

மெழுகுவர்த்திகள் அமைதியை அடைகாக்கின்றன...



வால்களுக்கு இருக்கும் பேராசையெல்லாம்

அவை சிறந்த வாலாக இருக்கவேண்டும் என்பதல்ல...



அவையே தலையாகத்தம்மைப்

பாவித்துக்கொள்வதால்....

வால்களெல்லாம் ஒன்று சேர்ந்து தீர்மானம்

போடலாம்...



இனித்தலைகளை எண்ணுவதை எதிர்த்து

வால்களை எண்ண வற்புறுத்துவோம்...



'தலைமை" என்பதை ஒழித்து "வால்மை'

என்று கொண்டு வருவோம்...



வால்களின் எண்ணிக்கை அதிகம்...

அவற்றிலிருந்து தப்பிக்க ஒரே வழி...

சரியான நேரத்தில் அவற்றை உதிர்ப்பது ஒன்றுதான்."..



"அற்புதமான விளக்கமுங்க....அற்புதம்...

இறையன்பு எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்காரு."...



"தலையிருக்க வாலாடும் கூட்டங்களைச் சுட்டிக்காட்டி

தலை என்ன செய்ய வேண்டும் என்று புத்திமதியல்லவா

கூறியிருக்கிறாரு.'.......



"இங்கை கனடாவில தலையிருக்க வாலாடும் கூட்டம்

எவ்வளவு இருக்கு....தலையெல்லாம் என்ன செய்யலாம்

என்று யோசிக்க விடாமல் பதில் சொல்லியிருக்காரு இறையன்பு..".

என்றாள் கவிதா...



"அடிமண்டு......கனடாவில் மட்டுமில்லை....

உலகம் பூராவும் இப்போ இதே நடப்புத்தான்....

தலையெல்லாம் தம்மைப்பிச்சுக்கிற நிலைதான்"...



"என்ன பண்றது.....நாட்டு நடப்பு அப்படியடி."....



"நானும் நீயும் நினைச்சு என்ன பண்றது.....

புரியவேண்டியவங்களுக்கு புரியல்லயே.".....



"நம்ம ஆபீஸ் நிலையும் இதேகதிதான்....

நம்ம டைரக்டர் நம்மிட்ட அன்னைக்கு

கூப்பிட்டு இதைத்தானே பேசிக்கிட்டாரு."...



"அந்தாளு நல்ல மனுசன்...

அந்தாளை சுத்த இருக்கும் கூட்டம் ஒரு வழிபண்ணிடும்போல

இருக்கு....ரொம்பப் பாவமாத்தான் இருக்கு".....



நான் அவருக்கு "குழந்தப்பிள்ளைக்கு குட்டிநாய்க்கும்

இடம்கொடாதையுங்க."..என்று மட்டும் சொல்லிக்கிட்டேன்....



"மனிசன் என்ன நெனைச்சாரோ தெரியல்ல...."



அப்படியே என்னைக் கட்டிப்பிடிச்சு கலங்கிட்டாரு....

"யோசியாதையுங்க ...கவனமாய் இருங்க' ....என்று

சொல்லிட்டு வந்திட்டன்...



"சரி சரி....கவிதா ஒரு காப்பிபோடேன் குடிப்போம்".

என்றான் அறிவழகன்....



'சரி விடுங்க....போட்டிட்டு வாறன்"....என்று எழுந்தவளை

ஏ...வாடி என்றவாறு இழுத்தணைத்து முத்தங்கள் அவள்

கண்களில் பதித்தான்....



அதுஎன்னவோ அந்த கிருஸ்ணகாந்தக்கண்களுக்கு

அவன் அடிமையாகி இரண்டு வருடங்கள்தான்....



இந்த இரண்டு வருடங்களில் எத்தனை முத்தங்களை

அந்த விழிகள் இரண்டும் சந்தித்தித்திருக்கும்....



என்ன அந்த விழிகள்....காந்தமாகி ஒட்டவைக்கும் விந்தை...

வெட்கத்தைவிட்டு சொல்லணும்னா.....



அந்த விழிகள் வாங்கிய முத்தங்கள்தான் ஏராளம்...

அத்தனை அழகுக்கண்கள்.....



(பாடல்....மொழியிலே தெரியுது ....

படம்....அழகி...

பாடியவர்கள்...கார்த்திக்...பவதாரிணி )



இப்படித்தான் ஒருமுறை அவன் ஆபீஸில்

தாளில் அவள் விழிகளை வரைந்து அதன்கீழே



"உன் கிருஸ்ணகாந்த விழிகளுக்குள் முத்தெடுக்கும் இதழ்கள்!

தேன் சொட்டிருக்கும் தேனிதழை விட சித்தமதைக் குளிரவைக்கும்

விந்தை யென்ன விந்தையடி!.."



என்று கிறுக்கியதை தற்செயலாக அந்தநேரம்வந்த டைரக்டர்

பார்த்திட்டு..



"என்னப்பா .......என்ன ....ஏதோ கிறுக்கிக்கிட்டிருக்க....

தா ....பாப்பம்"....என்று எடுத்துப்பார்த்து ......

"அறிவழகன்!.....ஐ லைக் யூ மேன்.."..



"யுவர் வைவ்ப் இஸ் வெரி லக்கிவுமன்."...

"யேஸ்....அறிவழகன்....யேஸ்....றியலி....ஸீ இஸ் லக்கி.."...



என்று அவன் முதுகைத்தட்டிக் கொடுத்த சம்பவம்...

அவனுக்கு ....இன்றுமாதிரி......இருந்தது....



"என்னங்க ......என்ன சொப்பனம்.....காப்பியோட

வந்து எத்தன நிமிடமாய்ச்சு....

நானும் பார்க்கிறேன்....ஏதோ கண்ணை மூடி ரசனையில்

இருக்கிறீங்க போல."....



"இன்னும் இறையன்புவை விட்டு இன்னும் வரலையா'...



என்று போலிக்கிண்டலாக கேட்டாள்....



அவளுக்குத்தெரியும்....அவன் நினைவுகள் தன் வசமென்பதை.....

அது புரியாமலா....இந்த இரண்டு வருட வாழ்க்கை.....



எத்தனை சுகங்கள்...எத்தனை உணர்வின் ராகங்கள்....

இணைபிரியா அந்த மனங்களுக்குள் எத்தனை

சங்கீத லயங்கள்.....



இரவென்ன ...பகலென்ன....மதியமென்ன...

சல்;லாப சரசங்கள் சுருதி விலகாத நயங்கள்.....

நினைக்கும்போது அவளுக்குள் இன்பரசம்...



"தனக்குக்கிடைத்தவன் ஓர் அற்புத இரசனை கொண்டவன்."...

என்று மனதுக்குள் நினைத்து நினைத்து இரசிப்பாள்....



அவன் குறும்புகளை அவள் இரசிக்காத நாட்களா....



யுகப்பொழுதுகளையும் கணப்பொழுதாக்கும் அவன்

வேடிக்கைகள்....நாளாந்த அவன் வாடிக்கைகள்....



காலை விடிந்தது தெரியாது சந்தோசங்கள்...

அவசரஅவசர ஆபீஸ் கிளம்புகை...திரும்பும்வரை

அவன் மறக்கமுடியாதபடி கொடுக்கும் முத்தங்கள்.....



ஒரு பெண்ணுக்கு இதைவிட என்ன வேண்டும்....

என்று அவள் போடும் கோலங்கள்....



நேரம் கிடைக்கும்போதெல்லாம்....ஏதேதோ.....

தன்மனம் போன போக்கிற்கு கிறுக்கிவைப்பாள்.....



உண்மையில்....அவை கிறுக்கல் அல்ல.....

அவள் உள்ளத்து உணர்வுகளின் வடிப்பு....அது....



"முத்தங்கள் பதிப்பாய்! சத்தமில்லாத சங்கீதம் இசைப்பாய்....

சித்தங்கள் குளிர சிந்தையை நிறைப்பாய்...இத்தனை

முத்துக்கள் சொத்தாக அத்தான்- உன்

பித்துக்குள் தளிர்க்கொடியிவள் துடிப்பதைப்பாராயோ...'



என்று கிறுக்கி விட்டு ஒருமுறை அவனுக்குத்

தெரியும்படி ட்றெஸிங் ரேபிளில் வைத்துவிட்டு

குளிக்கச் சென்றவள்....



"சட் சட்."...என்று குளியலறைக்கதவு தட்டப்படுகையில்

பயந்தபடி "யாரது.!...என்று கேட்கையில்....

"அடிமண்டு....நான்தாண்டி...கதவைத்திற."...



என்றவன் சட்டென்று அவளை அணைத்துக்கொண்டு

சந்தோஷ சங்கீதம் பாடியது அவளுக்கு பதிந்த

ஏடுகளாகி நினைவுக்கு வருகிறபோதெல்லாம்

பாடாய்ப்படுத்தும் விந்தை சொல்லிமாளுமா......



"இப்படி ஒரு கவிதை எழுதியதற்கு ஒன்றல்லவடி

ஓராயிரம் முத்தங்கள் பதிக்கலாம்" என்றவன் செய்த

குறும்புகள் அவளுக்குள் குறுகுறுப்புக்களை

கொண்டுவந்து சேர்த்துவிடும் தன்மை......



(பாடல்...புத்தம்புதியதடா.கொடுத்த முத்தம் ....

படம்...காதல் சடுகுடு..

பாடியவர்கள்....உன்னிகிருஸ்ணன்...சாதனாசர்க்கம்.)



இப்படி எத்தனையோ....எத்தனையோ....நிகழ்வுகள்...



இரசனைகள் ஒன்றிணைந்து சங்கீதம் பாடும் குயில்கள்

ஓயுமா.....கூவிக்கொண்டே இருக்குமே.....

இனிமையாகக் கூவுமே......





சட்டென்று கடிகாரச்சத்தம் அவனை சுயநினைவுக்கு கொண்டு

வந்து நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தது...



இன்னும் ஒருமணி நேரத்துக்குள் பதில் சொல்லியாக வேண்டுமே..



யாரோ தப்புச்செய்ய யாரோ தண்டனைபெறுவது என்ன நியாயம்...



ஆபீஸ் பணம் ஐம்பதினாயிரம் டொலர் கணக்கு மிஸ்...

.

அவன் அக்கவுண்டனாக சேர்ந்த காலத்திலிருந்து

அந்த ஆபீஸில் அவன் நம்பிக்கை நாணயம்

நிறைந்தவனாக எல்லோராலும் பாராட்டப்பெற்ற ஒருவன்....



அவனுடைய நேர்மை மற்றவர்களை பொறாமை கொள்ள

வைத்தாலும் ....



அவனுடைய பழைய டைரக்டர் இளைப்பாறும் வரை....

அவனை ஒன்றும் மற்றவர்களால் செய்துவிடமுடியவில்லை....



அவருக்கு அவன் என்றால் உயிர்....

நம்பி எந்தப்பொறுப்பையும் ஒப்படைத்து விடுவார்....

அவனும் கச்சிதமாக செய்து முடித்து அவரது

நம்பிக்கையைக் காப்பாற்றிவிடுவான்...



அந்த வகையில் அவனுக்கு மதிப்பு அங்கிருப்பவர்கள்

விரும்பியோ ....விரும்பாமலோ....கொடுத்தேதான் தீரவேண்டும்...

என்ற நிலையில் .....



அவனை சரியான தருணம் வரும்வரை குழிபறிக்கக்காத்திருந்தார்கள்

என்பதுதான் உண்மை...



நல்லவர்கள் நேர்மையானவர்களைக் காலமும் உலகமும்

சோதனைக்குள் தள்ளிவிடும் என்பதில் எவ்வளவு உண்மையிருக்கிறது...



போலிகளுக்கு மதிப்பளிக்கும் உலகம்......

நீலிகளுக்காக நல்லவர்களைப் பகைக்கும் உலகம்....

வேலிகளைத்தாண்டி நீளுகின்ற லஞ்சம் ........



காலிப்பயல்களை வளர்க்கும் கூட்டம்.....

இவர்களுக்கு மதிப்புக்கொடுக்கும் உலகத்தில்...

No comments:

Post a Comment