Friday, March 18, 2011

காதல் தோல்வியென்றால் மரணம்மும் மருந்தா?

மண்ணில் விழுந்த விதையைபோல
மனசு இருக்குது அவள் மனதில் முளைக்குது
இரு இலைகள் முளைக்கும்போது
எந்தன் கண்கள் பனிக்குது அது
இருளில் இருந்த பணியை போல எதற்கு இருக்குது

மூன்று இலைகள் துளிர்க்கும்போது
முயற்சி வியக்குது முடிவில் தண்டு உயருது
துரத்தி வரும் கனவும் அவளால்
துன்ப தண்டாய் உயர்த்து தூக்கம் மறுக்குது

செடிதனில் பூவிருக்கு என்னை
செய்தி பழிக்குது இனி எதையோ செய்ய துடிக்குது
இயற்கை தந்த அந்த பூவே, எதிர்காலமாய் இருக்குது
என்னவளுக்கு நான் தந்த பூவும் அதனை பழிக்குது

மணத்தக்காளி போல கண்ணு
மாறி போனது உன்னால் மாறி போனது
மன நினைவில் அவளை தின்று
மணத்தக்காளியாய் கசந்து போனது

மணத்தக்காளி மருந்துதாண்டி உண்டால்
மனிதருக்கு புற்றை கெடுக்குது மேலும் சமூலமாய் இருக்குது
மறந்து விட்ட உன் நினைவும் நித்தம் வளர்க்குது
மனித காதல் இதுவும் ஒன்றே புற்றாய் செழிக்குது

விதையும் காதலும் வேறெல்ல
வெற்றி கொடுக்குது விதி தட்டி கெடுக்குது
மருந்தாய் மாறிய மணத்தக்காளி (க) விதையாய் இருக்குது
மரணத்தை மருந்தாய் விதைக்கும் காதல் அப்படி அவளால் முளைக்குதா ?

No comments:

Post a Comment