Friday, March 18, 2011

என் கனவுகளில்

நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால் ...
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன் .....

உன் அழகின் இரகசியம்

இப்போது தான் தெரிந்தது
உன் அழகின் ரகசியம் ......
எத்தனை முறை குளித்தாயோ
என்னை போன்ற
பெண்களின் கண்ணீரில் .....

தேர்தல் கூட்டணி

"நேற்று இருந்தார்
இன்று இல்லை "
என்னும்
சிறுமை உடைத்து
-தேர்தல் கூட்டணி

தேர்தல் கூட்டணி

"நேற்று இருந்தார்
இன்று இல்லை "
என்னும்
சிறுமை உடைத்து
-தேர்தல் கூட்டணி

நானும் அவளும்

பனிப்பெய்யும் மலையில் இரவுபகல் ஒன்றுசேரும்
இனிய மாலையில் நிலவின் ஒளி
காரிருளின் நிலையை மாற்றும் தருனத்தில்
மஞ்சள் முகம் கொண்டு மருதநில
உடையுடுத்தி பூவின் வாசம் கொண்டு
கண்ணெதிரில் தோன்றியவள் நிலவின் திருமகளோ
இல்லை மண்ணில் குதித்த தேவதையோ
என்றெண்ணி பார்க்க சீதையின் குணம்
கொண்டவளின் கரம்பிடிக்க நான் ராமனாவேன்.

அம்மா நலமா

அம்மா நலமா ,என்றான் -மகன்
15 வருடங்களுக்கு பிறகு
முதியோர் இல்லத்தில்.
அமரிக்காவில் கிரீன் கார்டு வாங்கியவன்

என் காதல் ஜெயிக்கப் போவது இல்லை...

கண்ணிமைக்காமல் கைபேசியை பார்த்துக்கொண்டு உன் குறுஞ்செய்திக்காக கடுந்தவம் இருந்த நாட்கள் உண்டு...

என்னை யாரன்று தெரியாமல் பகல்கனவோடு பைத்தியக்காரியைப் போல் வாழ்ந்ததுண்டு...
கள்ளமில்லா என் காதலை கவிதையாய் சொல்லிட மனம் நினைப்பதுண்டு...
பெண்மையின் நாணமும் அங்கே தடுப்பதுண்டு...

உறவுகளிடம் கூட சொல்ல முடிந்த என் காதல் உன்னிடம் மட்டும் ஊமையாக...

யாரைப் பார்த்தும் வராத மாற்றம்
உன்னைப் பார்க்கும் போது மட்டும் da...
உன் நினைவுகள் என்னை கொல்லும் போது
கண்ணீர் கூட சுகமாகத்தான் இருந்ததடா...
என் காதலுக்கு காரணமும் தெரியலடா...
வார்த்தையை தொலைச்சிட்டு கண்ணீரோடு தோழியின் மடியில் குடிகாரனைப் போல் உனக்காக புலம்பியதுண்டுடா.....
இது உண்மை தானானும் புரியலடா...

சொல்லாத என் காதல் பொய்யும் இல்லை..
சொல்ல தைரியம் இல்லாத என் காதலும் ஜெயிக்கப் போவதும் இல்லை ...

காதல் தோல்வி............................

அவள் பிரிந்த செய்தி
அறிந்த போது
அதிர்ந்து போனேன்

அவள் நண்பனாக
இருந்தவனை
காதலனாக்கி கொண்டாள்
என் காதலை என்னிடமே
விட்டு சென்றால்

காதலின் உணர்வுகளை
புரிந்துக்கொள்ள முடியாதவளுக்கு
அடுத்த காதல் எதற்கு

தன்னை தானே
புலம்பி நின்றேன்
காதலில் தோற்றவனாக.............

உன் அழகின் இரகசியம்

இப்போது தான் தெரிந்தது
உன் அழகின் ரகசியம் ......
எத்தனை முறை குளித்தாயோ
என்னை போன்ற
பெண்களின் கண்ணீரில் .....

வலி

மென்மை மனம் வலிக்கிறது
வழியில் முட்களால் ரணம்...

மௌனமாய் தாங்கினாலும்
கண்களில் குளம் கட்டுகிறது...

முனகவும் முடியவில்லை
தொண்டையில் விழுங்கி விட்டேன்
செரிமானம் ஆகும் என்ற நம்பிக்கையில்...