Sunday, July 18, 2010

Friday, July 16, 2010

இரகசியம்

எனக்குத் தெரியும்


அங்கே சிதறிய செங்குருதியின்

சொந்தக் காரனை







அவன் பெயர்

காற்றின் அசைவுக்குள்

தவழ்ந்து செல்லாது

அது இரகசியமாய்ப்

பேணப்பட வேண்டிய

உன்னத பெயர்







சிலரின் இதய அறைக்குள் மட்டுமே

அவனுக்கான சடங்குகள்

நடக்கும்







பெற்ற தாயும் அறியாத

பரம இரகசியம்

அவனது விடுதலை வேள்வி







அந்த செங்குருதியின்

சொந்தக் காரனின் பெயர்

எந்த நடுகல்லிலும் இல்லை







மலரும் தமிழீழத்தில்

உரத்து உச்சரிக்கப்படலாம்

அந்த வேங்கையின்

அதிசய சாதனைகள்.

இரகசியம்

எனக்குத் தெரியும்


அங்கே சிதறிய செங்குருதியின்

சொந்தக் காரனை







அவன் பெயர்

காற்றின் அசைவுக்குள்

தவழ்ந்து செல்லாது

அது இரகசியமாய்ப்

பேணப்பட வேண்டிய

உன்னத பெயர்







சிலரின் இதய அறைக்குள் மட்டுமே

அவனுக்கான சடங்குகள்

நடக்கும்







பெற்ற தாயும் அறியாத

பரம இரகசியம்

அவனது விடுதலை வேள்வி







அந்த செங்குருதியின்

சொந்தக் காரனின் பெயர்

எந்த நடுகல்லிலும் இல்லை







மலரும் தமிழீழத்தில்

உரத்து உச்சரிக்கப்படலாம்

அந்த வேங்கையின்

அதிசய சாதனைகள்.

அந்தச் சிறுவன் திரும்பி வருவான்

அந்தத் தாய் நம்புவதைப்போல


அவனின் தந்தையும்

சகோதரர்களும் நம்புவதைப்போல

அவன் திரும்புவான் என்பதையே நாமும் நம்புவோம்.

அந்த வழிகள் இன்று எங்கிருக்கின்றன?

அவன் பல குழந்தைகளுடன்தான்,

பல சிறுவர்களுடன்தான் காணமல் போயிருக்கிறான்.



தோழனே!

பெரு நிலம் முழுக்க முழுக்க குழந்தைகளின்

இரத்தம் படர்ந்த நிலையிலேதான் தோற்றிருக்கிறது.

எதிர்பாராத விதமாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்

அஞ்சலிக்குறிப்புகளில்

அவனுக்கும் ஒன்று எழுத நேர்ந்திருக்கிறது.

குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும்

அஞ்சலிக்குறிப்புக்களை

எழுதுவது மிகப்பெரும் சாபமாய் வலிக்கிறது.

உனது சொற்கள் அவனுக்காக காத்திருந்ததை நானறிவேன்.



ஏதோ ஒரு தடுப்பு முகாமையும்

ஏதோ ஒரு சிறைச்சாலையும்

மாறிமாறி தேடிக்கொண்டிருந்தாய்.

யாரே பார்த்திருக்கிறார்கள்

அவனின் கிழிந்த கால்சட்டையை.

ஷெல் குழந்தைகளை தின்னும் என்பதையும்

சிறுவர்களை கொன்றுபோடும் என்பதையும்

அந்தச் சிறுவன் அறிந்திருந்தான்.

தனக்கு முன்னால் நிகழ்நத எல்லா மரணங்களையும்

கண்டு அஞ்சியிருந்தான்.



எங்கள் சிறுவர்கள் இனி புன்னகைப்பார்களா?

அவன் கரைக்கப்பட்ட நிலத்தில்

இனி என்ன நிறத்தில் பூக்கள் மலருமா?

தன் முகத்தையும் புன்னகையையும்

அவன் எங்கு கொண்டுபோய் வைத்திருப்பான்.



தோழனே!

நீங்கள் அவனுக்காக புத்தகங்களை எடுத்து வையுங்கள்.

அவன் தன் இரவுப்பாடப்பயிற்சிகள்

நிறைவு செய்துகொண்டு

வகுப்பறைக்கு திரும்புவான்.

ஒளித்து வைத்த எல்லாவற்றையும் அவன் மீட்டுக்கொண்டு

திரும்புவான் என்பதை நாமும் நம்புவோம்.

_______________________

( யுத்தத்தில் கொல்லப்பட்ட தர்மேகனுக்காய் )

(தீபச்செல்வன்)

அந்தச் சிறுவன் திரும்பி வருவான்

அந்தத் தாய் நம்புவதைப்போல


அவனின் தந்தையும்

சகோதரர்களும் நம்புவதைப்போல

அவன் திரும்புவான் என்பதையே நாமும் நம்புவோம்.

அந்த வழிகள் இன்று எங்கிருக்கின்றன?

அவன் பல குழந்தைகளுடன்தான்,

பல சிறுவர்களுடன்தான் காணமல் போயிருக்கிறான்.



தோழனே!

பெரு நிலம் முழுக்க முழுக்க குழந்தைகளின்

இரத்தம் படர்ந்த நிலையிலேதான் தோற்றிருக்கிறது.

எதிர்பாராத விதமாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்

அஞ்சலிக்குறிப்புகளில்

அவனுக்கும் ஒன்று எழுத நேர்ந்திருக்கிறது.

குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும்

அஞ்சலிக்குறிப்புக்களை

எழுதுவது மிகப்பெரும் சாபமாய் வலிக்கிறது.

உனது சொற்கள் அவனுக்காக காத்திருந்ததை நானறிவேன்.



ஏதோ ஒரு தடுப்பு முகாமையும்

ஏதோ ஒரு சிறைச்சாலையும்

மாறிமாறி தேடிக்கொண்டிருந்தாய்.

யாரே பார்த்திருக்கிறார்கள்

அவனின் கிழிந்த கால்சட்டையை.

ஷெல் குழந்தைகளை தின்னும் என்பதையும்

சிறுவர்களை கொன்றுபோடும் என்பதையும்

அந்தச் சிறுவன் அறிந்திருந்தான்.

தனக்கு முன்னால் நிகழ்நத எல்லா மரணங்களையும்

கண்டு அஞ்சியிருந்தான்.



எங்கள் சிறுவர்கள் இனி புன்னகைப்பார்களா?

அவன் கரைக்கப்பட்ட நிலத்தில்

இனி என்ன நிறத்தில் பூக்கள் மலருமா?

தன் முகத்தையும் புன்னகையையும்

அவன் எங்கு கொண்டுபோய் வைத்திருப்பான்.



தோழனே!

நீங்கள் அவனுக்காக புத்தகங்களை எடுத்து வையுங்கள்.

அவன் தன் இரவுப்பாடப்பயிற்சிகள்

நிறைவு செய்துகொண்டு

வகுப்பறைக்கு திரும்புவான்.

ஒளித்து வைத்த எல்லாவற்றையும் அவன் மீட்டுக்கொண்டு

திரும்புவான் என்பதை நாமும் நம்புவோம்.

_______________________

( யுத்தத்தில் கொல்லப்பட்ட தர்மேகனுக்காய் )

(தீபச்செல்வன்)

தலைவன் வருவான்டா தமிழா..

ராஜா ராஜா சோழன் கொடுத்தாண்ட புலிக்கொடி .


தொடுத்தான்ர என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை.

என் அண்ணன் மறுபடியும் வருவான்ரா தமிழ் ஈழம் வென்று தருவான்ரா

தளராதே தமிழா தளராதே…



தமிழீழத்தில் புலிக்கொடி பறக்கும் தளராதே தமிழா .

முப்படையும் வரும் மும் முனையிலும் மோதும் .

பண்டாரவன்னியன் ஆண்டவன்னி மண்ணடா.

என் அண்ணன் ஈழமண்ணில் எதிரிகள் யாவரையும் விடப்போவதில்லை .

எதிரியின் உடல்கள் யாவும் வந்து குவியுமடா வன்னிமண்ணிலே.

தளராதே தமிழா தளராதே…



நீரில் எரியும் திபமடா வற்றாப்பளை தீயில் எரிவதா.

அண்ணன் விடப் போவதில்லையடா .

இங்கு எங்கே சிங்களவனை ஆழவிட்டது யாரடா .

அண்ணன் படை விரட்டுமடா .

இங்கு தமிழன் ஆளுவானடா .

தளராதே தமிழா தளராதே..



அண்ணன் சொல்லில் அண்ணன் படை தமிழீழம் படைக்குமடா

காலம் வரும் நல்ல நேரம் வரும் .

கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் படை பாயும் .

எதிரி கண்ணில் ஈழமண்ணை துவுமாடா .

தளராதே தமிழா தளராதே .



அண்ணன் படை தமிழீழம் வென்று தரும்.

மகிந்தாவின் மானம் தெருவெங்கும் நாய் இழுக்கும் .

தமிழனின் வீரம் புலிக்கொடியாய் வானில் பறக்குமடா .

சோனியாவின் துண்டு சாணியாக மாறும் .

தளராதே தமிழா அண்ணனின் கையில் இன்னும் வீரமுண்டு .

தளராதே தமிழா தளராதே தமிழா தளராதே தமிழா..



பாமினி

எங்கே வாழுது நீதி?

கனவுகள் சிதைக்கப்பட்ட


சின்னவள் சொல்லும்

விசித்திர உண்மை இது

முள்ளிவாய்க்கால் முற்றுப்பொற்றுவிட்டது – என

மார்பு தட்டும் சிங்களங்கள் மத்தியில்

கொடிய வெறியுடன் அலையும்

பிணம் தின்னிகளாய் நம்மவருமா?



சிறையில் அடைக்கப்பட்ட

மொட்டுகளை விடுவித்து

தினமும் வேதனைப்படுத்தும்

எம்மவருக்கு எதற்கு முகத்திரை…..

உன்னால் ஒடுக்கப்பட்ட

என்போன்றவர்களின் ஒப்பாரி குரல் இது

உண்மைகள் அழியவில்லை உறங்குகிறது

உரத்திடும் காலம் வரும் வரை







புத்த மதத்துக்கு புத்தி பேலித்தது

செத்து கிடக்கும் எம்மவர் பிணங்களின்

ஆடைகளை கிழிப்பதில்…..

எம்மவருகோ புத்தி பேலித்தது

சிதைந்து போனதை ரசிப்பதில்…….

நெந்துகிடப்பதை பந்தாடுகிறது-அரசியல்

கனவுகள் சிதைக்கப்பட்ட

சின்னவள் சொல்லும்

விசித்திர உண்மை; இது







உலகம் மறந்தது – என்னை

உலகத்தலைவர்கள் மறைத்தனர் - என்துயரை

அப்போது தான் மனிதநேயம் மரணித்துப்போனது

கூட்டில் அடைக்கப்பட்ட குருவியை

குத்திக்கிழிக்கும் கொடியவிசமிகள்

போர்என்று வந்த பிணம்தின்னிகளும்

பெண்களை சிதைக்கும் கொடியவிசமிகளும்

என்ன வித்தியாசம்

என்போன்றவர்களின் முனங்கல்கள்

இன்னமும் ஒயவில்லை……..

என் உறவுகளே……

கனவுகள் சிதைக்கப்பட்ட

சின்னவள் சொல்லும்

விசித்திர உண்மை;-இது





முகத்திரைகளை கிழித்து-எம்மவர்

என்பக்கம் திரும்பி

ஒருமுறையாவது கேளுங்கள்

இதில் எங்கே வாழுது நீதி;?







சுவிஸ்ஸிலிருந்து குட்டிசுபா

எனக்காய் யாறிருக்கிறார்?

எவரிடமும் கருணையில்லை




வக்கிரமும் வஞ்சனையும் படிந்த



முகங்களிடம் நான் அறிமுகமாகிறேன்



என்னை சுற்றிலும்



மனித மனங்களை தின்று குவிக்கும்



வேட்டைக்காரர்கள் இருக்கிறார்கள்



நான் ஏன் அப்பா இருக்கிறேன்



எனக்காய் யார் இருக்கிறா?;



நான் மீண்டும் ஏன் உயிர்க்கிறேன்



என்னை பார்க்கும் போதெல்லாம்



அவர்கள் முகத்தில் இரத்த ஒட்டத்தை



பகீஷ்கரிப்பு செய்கின்றார்கள்



என்புன்னகையை பார்ப்பவர்கள்ளில்லை அவர்கள்



என் வாழ்வை சிந்திப்பவர்களில்லை அவர்கள்



நான் ஏன் அப்பா இருக்கிறேன்



எனக்காய் யார் இருக்கிறாh?;



சிறைப்பிடித்தவர்கள் என்உயிரையும்



பிடுங்கி எறிந்திருக்கலாம்



தங்கள் வீடு குறித்தும்



தங்கள் கோடிகள் குறித்தும்



தங்ககள் நாற்றங்கள் குறித்தும்



யாரும் பேசுவதாயில்லை



இந்த வக்கிரம் பிடித்த மண்ணில்



ஏன் அப்பா என்னை நடமாட விட்டுஇருக்கிறாய்



எனக்காய் யார் இருக்கிறார்?



வெளிச்சத்தில் என் புன்னகையை



அறிமுகப்படுத்த விரும்புகிறேன்



வீதியோரத்தில் ஆனந்தமாய்



நடந்து வர ஆசைப்படுகிறேன்



மகிழ்ச்சியான ஏக்கங்கள்



கானல் நீராய் போகின்றன



கடைசி வரை போராடுகிறேன்



காலம் என்னை காதலிக்கும் என்று



அழகான வாழ்வு எப்படியிருக்கும்?



நான் ஏன் அப்பா இருக்கிறேன்



எனக்காய் யார் இருக்கிறார்?



உணர்ச்சியாய் உள்ள சொற்களைத்தவிர



என்னிடம் எதுவுமில்லை



ஒடுக்கமுடியாதஉண்மைக்குரலாய்



உலகத்தின் முற்றத்தில் நான்



ஏழு கடலும் எட்டாத வானிலும்



இன்னமும் எத்தனை பேர்



உலக ஒப்பனைக்காக



ஏன் அப்பா என்னை பெற்றொடுத்தாய்



இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்



நான் ஏன் அப்பா இருக்கிறேன்



எனக்காய் யார் இருக்கிறார்?



- குட்டிசுபா









எதிர்வரும் நிகழ்வுகள்

24/7 - அவுஸ்திரேலியாவில் மாமனிதர் எலிசேயர் நினைவுநாள் விரிவுரைகள்



யேர்மனியில் புறநாநூற்றுக் கலை நிகழ்வு . 24.07.10 எசன் நகரில் ; 25.07.10 பெர்லின் நகரில்



தோள்கொடுப்போம் துயர்துடைப்போம் - Rasana



பெல்ஜியம்: தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்தும் விளையாட்டுப்போட்டி.



17/7 - அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் தேசிய வருடாந்தப் பொதுக் கூட்டம்



பிரான்சில் புறநாநூற்றுக் கலை நிகழ்வு.



புறநானூறு



மாவீரர் நினைவு மெய்வல்லுனர் போட்டி - 2010



உறுதிப்பூங்கள் எழுச்சிக்கலை நிகழ்வுகள்



அக்கினித் தாண்டவம் 2010









சிறப்புச் செய்திகள்

Jul 15, 2010

போராளிகளை நாய்கள் என்று திட்டி வதைக்கும் படையினர் - பி.பி.சி தகவல்





போராளிகளை தாம் மிகவும் சிறப்பாகப் பராமரிப்பதாகக் கூறிவரும் சிறீலங்கா அரசு, எந்தவொரு மனித உரிமை அமைப்புகளையோ, தனி நபர்களையோ அவர்களைப் பார்வையிட...



Jul 14, 2010

திலீபன்; "கலைஞர்"; வீரவன்ச! "சாகும்வரை உண்ணா நோன்பு"





ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் மேற் கொள்ளப்பட்ட/படும் "சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு



Jul 13, 2010

அவுஸ்திரேலிய செனட் சபைத் தேர்தலில் தமிழீழத்தை சேர்ந்த பிராமி ஜெகன் போட்டியிடவுள்ளார்.



அவுஸ்திரேலிய செனட் சபைக்கான தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற இவ்வேளையில், பிராமி ஜெகன் என்னும் 30 வயதான இலங்கைத் தமிழ்ப் பெண்மணியும் அத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்.



Jul 12, 2010

தமிழரைக் காக்க இலங்கை செல்ல தமிழக இளைஞர்களை அனுமதிக்கத் தயாரா?



தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுருகனை விட்டு..

Jul 9, 2010

கறுப்பு ஜூலை – போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் இரவுநேரப் போராட்டம்



புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், அமைப்புக்களும் கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக சிறீலங்கா அரசு புரிந்த போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் அம்பலத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன்...

கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்

உலக ஒப்பனைக்கு


ஒலமிடுபவர்களே……

கனக்கும் நெஞ்த்தோடும்

கலங்கும் விழிகளோடும்

கண்களை மூடி

கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்











கண்ணீரும் செங்குருதியும்

சகதியாகிப்போன

என் மண்ணில்

காற்றோடு கலந்துவிட்ட

என் உறவுகளுக்காக மீண்டும்

கண்களை மூடி

கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்







உலகமே சேர்ந்தது

என் இனத்தை

குழிதோண்டி புதைத்தது

இறந்தவரை நினைத்து

கதறுகிறேன் - மிகுதியாய்

இருப்பவரை நினைத்து

கலங்குகிறேன்

கொடிய இன வெறியனுக்கு

கை கோர்த்து நின்றது

கொடுங்கோல் ஆட்சிக்காக - இதனை நினைத்து

கண்களை மூடி

கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்







தமிழ் தாயின்சேலை தொட்டுழுக்க

தன்மானமிக்க தமிழன் தலைகுனிய

தறிகெட்டு ஓடியது சர்வதேசம்

இரவிரவாய் ஒலமிட்டு காலமது

எத்தனை கொடுமை அது

வன்னி மக்கள் உணர்வை

வார்த்தையால் வரைய முடியுமா?

என்னால் எழுத பலமில்லை

இன்னமும் என் விழியினுள் உறுதியாய்

பதிந்திட்ட நிஜங்கள் - இதனை நினைத்து

கண்களை மூடி

கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்







மாவிலாறு தெட்டு முள்ளிவாய்க்கால் வரை

உலகமே கண்டு மௌனித்தது

உண்மையை உறங்க வைத்தது

கை கூப்பி நின்று கதறினர் ஜ.நா நேக்கி

இரக்கமும் பரிவும் காட்ட

அருகதையற்றவரா?

நச்சு வாயு அடித்து கொன்று

நாசமாக்கிய என் உறவுகளை – நினைத்து

கண்களை மூடி

கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்



- குட்டிசுபா







எதிர்வரும் நிகழ்வுகள்

24/7 - அவுஸ்திரேலியாவில் மாமனிதர் எலிசேயர் நினைவுநாள் விரிவுரைகள்



யேர்மனியில் புறநாநூற்றுக் கலை நிகழ்வு . 24.07.10 எசன் நகரில் ; 25.07.10 பெர்லின் நகரில்



தோள்கொடுப்போம் துயர்துடைப்போம் - Rasana



பெல்ஜியம்: தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்தும் விளையாட்டுப்போட்டி.



17/7 - அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் தேசிய வருடாந்தப் பொதுக் கூட்டம்



பிரான்சில் புறநாநூற்றுக் கலை நிகழ்வு.



புறநானூறு



மாவீரர் நினைவு மெய்வல்லுனர் போட்டி - 2010



உறுதிப்பூங்கள் எழுச்சிக்கலை நிகழ்வுகள்



அக்கினித் தாண்டவம் 2010









சிறப்புச் செய்திகள்

Jul 15, 2010

போராளிகளை நாய்கள் என்று திட்டி வதைக்கும் படையினர் - பி.பி.சி தகவல்





போராளிகளை தாம் மிகவும் சிறப்பாகப் பராமரிப்பதாகக் கூறிவரும் சிறீலங்கா அரசு, எந்தவொரு மனித உரிமை அமைப்புகளையோ, தனி நபர்களையோ அவர்களைப் பார்வையிட...



Jul 14, 2010

திலீபன்; "கலைஞர்"; வீரவன்ச! "சாகும்வரை உண்ணா நோன்பு"





ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் மேற் கொள்ளப்பட்ட/படும் "சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு



Jul 13, 2010

அவுஸ்திரேலிய செனட் சபைத் தேர்தலில் தமிழீழத்தை சேர்ந்த பிராமி ஜெகன் போட்டியிடவுள்ளார்.



அவுஸ்திரேலிய செனட் சபைக்கான தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற இவ்வேளையில், பிராமி ஜெகன் என்னும் 30 வயதான இலங்கைத் தமிழ்ப் பெண்மணியும் அத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்.



Jul 12, 2010

தமிழரைக் காக்க இலங்கை செல்ல தமிழக இளைஞர்களை அனுமதிக்கத் தயாரா?



தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுருகனை விட்டு..

Jul 9, 2010

கறுப்பு ஜூலை – போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் இரவுநேரப் போராட்டம்



புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், அமைப்புக்களும் கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக சிறீலங்கா அரசு புரிந்த போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் அம்பலத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன்...

த‌மிழ‌னுக்கு வேத‌னைக் கூட‌ம் சைனாவுக்கோ சோத‌னைக்கூட‌ம்...

விடிந்தால் ம‌டிவோமா?


இல்லை

ம‌டிந்தால் விடியுமா? யென‌

ம‌ர‌ண‌ அச்ச‌த்தின் மிச்ச‌மாய் நின்ற‌

ம‌க்க‌ள் வெள்ள‌ம்...



காட்டிக்கொடுத்த‌ த‌மிழ‌னின் வினையால்

காட்டிய‌ இட‌த்திற்கு வ‌ந்தான் த‌மிழ‌ன்

கூடிய‌ இட‌த்தில் வீழ்வான் த‌மிழ‌ன் யென‌

ராஜ‌ ப‌ட்சிக‌ள் மாமிச‌ம் திண்ண‌

வ‌ட்ட‌ம‌டித்த‌ சூட்ச‌ம‌ இட‌ம்....





கோடி செல‌வுக‌ள் செய்து த‌யாரித்த‌

உயிர்கொல்லி ஆயுத‌ம் உத‌வுமாயென்று

வ‌ல்ல‌ர‌சு நாடுக‌ள் அள்ளிக் கொடுக்க‌...

ப‌திலுக்கு க‌ருகிய‌ எம் ம‌க்க‌ளை வாரி கொடுத்த‌

த‌மிழ‌னுக்கு வேத‌னைக் கூட‌ம்

சைனாவுக்கோ சோத‌னைக்கூட‌ம்...



த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ ஆயுத‌திற்கு

அங்கு த‌டைக‌ள் இல்லை

த‌மிழ‌னை அழிப்பதே அவ‌ர்க‌ளின்

த‌லையாய‌ கொள்கை....





போர் ம‌ரபு கூறிய‌ முதியோர், சிறியோர்?

போர் ம‌ர‌பு மீறிய‌ குற்றுயிர் ம‌ர‌ண‌ம்

க‌ண்டும் காணாத‌ ஐநா சாச‌ன‌ம்

க‌ட்டிக் காத்து

காட்டி கொடுத்த‌து இந்திய‌ சீத‌ன‌ம்



ஆயிர‌க்க‌ண‌க்கில்

ம‌க்க‌ளைக் கொன்று

அழித்தொழித்த‌

முள்ளிவாய்க்காலில்

பெறுக்கெடுத்த‌ ம‌னித‌ரெத்த‌ம்

உல‌க‌த் த‌மிழ‌ர் நெஞ்சில் பாய்ந்து

வ‌ள‌ர்த்தெடுக்குது த‌மிழிழ‌த்தை...

எங்கே போனது மனித நேயம்?

குத்தி கிழித்து கொன்று தின்னும்


கொடிய விசமிகளே

கொன்றழிக்க நினைப்பது

ஈழத்தமிழனையா……? இல்லையேல்

மனித நேயத்தையா?

சொந்த மண்ணிலேயே

சொரி நாயை விரட்டுவது போல் நம்மவரா?

பிணப்பசி எடுக்கும் போதெல்லாம்

ஏப்பம் இடுவதற்கு தமிழத்தாயா…?

உலகிற்கு நீ உரைப்பது

ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்

மரணித்து நிற்கும் மனித நேயத்தையா?

வீணி சலம் ஒழுக

விரட்டுகின்றனர்

வீதி வீதியாய் அலைந்தனர்- நம்மவர்

விடிவொன்று கிட்டும் என்று

பிணமாகி போனவர்களை

நினைத்து கதறுகின்றனர்

மிகுதியாய் வதைபடுபவர்களை

நினைத்து கலங்குகின்றனர்

இதில் உலகிற்கு வெளிச்சமிடுவது

ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்

மரணித்து நிற்கும் மனித நேயத்தையா

இரத்தம் குடித்தவனை

அரியணையில் வைத்து

அழகு பார்ப்பதா நீதி?

உலகெங்கும் கை கோர்த்து

சிவப்பு கம்பளம் விரித்து

விருந்து உபசாரமாம்

தன் இரத்த உறவு என்றழைத்தவனுக்கு

கொடுத்த பரிசா? இதனால்

உள்ள தமிழனும் மெல்லச்சாகின்றான்

உலகிற்கு நீ உரைப்பது

ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்

மரணித்து நிற்கும் மனித நேயத்தையா?

தமிழ்த்தாயின் சேலை தொட்டு இழுத்து

குத்திக்கிழித்த ஆடைகளில்

இன வெறியன் விட்டுசென்ற

வடுக்கள் ஏராளம்

ஆடைகள் சுற்றப்பட்ட சலனமில்லா

உடலங்களாக பாரினில் எத்தனை பேர்

உலகிற்கு நீ உரைப்பது

ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்

மரணித்து நிற்கும் மனித நேயத்தையா?



- குட்டிசுபா

விதியென்னும் வில் ஒடியும்

விதியே! விதியே!


என் செய நினைத்தாய்

தமிழ்ச் சாதியை?



இவர்களுடைய



வார்த்தைகளுக்குக் கூட

வயதாகிப் போனது..



இவர்களுடைய

வணக்கங்கள் கூட

பழசாகிப் போனது!



சுவர்கள்

சிறைகளாகி விட்டன.

சுவரொட்டிகள்

பாடப் புத்தகங்களாகி விட்டன.



தமிழில்

எனக்குப்

பேசவராது – என்று

சொல்வது கூட ஒரு

தகுதியாகிவிட்டது.



தமிழெழுத்து அழகாக இருக்கிறது

தமிழர்களின்

தலையெழுத்து அல்லவோ

தலைகீழாய்த் தெரிகிறது......



விதியே விதியே

என் செய நினைத்தாய்

தமிழ்ச் சாதியை?



எங்களது கைகளிலே

முயற்சியென்னும்

விதைகள் இருக்கும் வரை

விழ மாட்டோம்!



புதைத்தாலும் நாங்கள்

புதையல்களாய் வெளிப்படுவோம்!

துருப்பிடித்துப் போகோம்

தூங்குகின்ற புயல்கள் யாம்!



விதியே விதியே

என் செய நினைத்தாய்

தமிழ்ச் சாதியை?

விதியென்னும் வில் ஒடியும்

விதியே! விதியே!


என் செய நினைத்தாய்

தமிழ்ச் சாதியை?



இவர்களுடைய



வார்த்தைகளுக்குக் கூட

வயதாகிப் போனது..



இவர்களுடைய

வணக்கங்கள் கூட

பழசாகிப் போனது!



சுவர்கள்

சிறைகளாகி விட்டன.

சுவரொட்டிகள்

பாடப் புத்தகங்களாகி விட்டன.



தமிழில்

எனக்குப்

பேசவராது – என்று

சொல்வது கூட ஒரு

தகுதியாகிவிட்டது.



தமிழெழுத்து அழகாக இருக்கிறது

தமிழர்களின்

தலையெழுத்து அல்லவோ

தலைகீழாய்த் தெரிகிறது......



விதியே விதியே

என் செய நினைத்தாய்

தமிழ்ச் சாதியை?



எங்களது கைகளிலே

முயற்சியென்னும்

விதைகள் இருக்கும் வரை

விழ மாட்டோம்!



புதைத்தாலும் நாங்கள்

புதையல்களாய் வெளிப்படுவோம்!

துருப்பிடித்துப் போகோம்

தூங்குகின்ற புயல்கள் யாம்!



விதியே விதியே

என் செய நினைத்தாய்

தமிழ்ச் சாதியை?

Tuesday, July 13, 2010

அவள் ஒரு தொடர்கதையானாள்.

அவள் ஒரு தொடர்கதையானாள்.

...................................................................................
நிலவன் சிறு வயதில் வெளிநாடு என்று வெளிக்கிட்டு, அவன் நோர்வேயை வந்தடையும் வரை அவன் பார்க்காத நாடும் இல்லை, அவன் இருக்காத மறியலும் இல்லையென்றுதான் சொல்லலாம். அங்கு இங்கு என்று அடிபட்டு கடைசியில் நோர்வேக்கு வந்து சேர்ந்தான். நோர்வேயை வந்தடைந்தவுடன் அவனது ஊரில் தெரிந்த ஒரு குடும்பத்தை சந்தித்து ஒரிரு மாதங்கள் அவர்களோடு இருந்தான். பிறகு அவர்கள் சொன்னார்கள் "நிலவன் நீ இப்படி இருக்காமல் அகதியாகப் போய் பதி" என்று. பின்னர் ஒரு நாள் அவனையும் கூட்டிக்கொண்டு போய் அகதியாக அவனைப் பதிவு செய்தார்கள்.
அகதியாக பதிந்த பின்னர் அவனது வாழ்வு அகதி முகாமில் ஆரம்பித்தது. அந்த முகாமில் இருக்கும் அந்த அதிகாரிகள் அவனுக்கு ஒரு ரூம் கொடுத்து அங்கேயே தங்கக்

கூடியே வசதியும் கொடுத்துவிட்டார்கள். மேற்கொண்டு இந்த நாட்டில் இருப்பதென்றால் அந்த நாட்டு மொழி அவசியம். அந்த அதிகாரிகள் நிலவனை மொழி கற்பதற்கு பள்ளிகூடத்தில் சேர்த்தனர். இனி என்ன பள்ளிக்கூடமும் அவனது ரூமூமாய் சிறிது காலம் கழித்தான். சனி ஞாயிறு என்றால் அவனுக்குத் தெரிந்த அந்த குடும்பத்தின் வீட்டுக்கு போய் வருவான். இப்படியே ஒரு வருடத்தில் மொழியும் கற்று விட்டு தொழிற்கல்வியை தொடர்ந்தான். அந்த நேரம் தான் ஒரு நோர்வேஜிய பெண்ணை சந்தித்தான். அவளோடு நல்ல அன்பாக பழகினான் நாளடைவில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. இருவரும் தங்கள் அன்பை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

படம்: சேனா


பாடல்: உயிர் பிறந்தாலும்


கிட்டத்தட்ட இரண்டுமூன்று வருடங்களாக இருவரும் காதலராக வலம் வந்தனர்.

நிலவனுக்குள் ஒரு நினைப்பு. தான் ஒரு வெளிநாட்டுக்காரியை திருமணம் செய்துகொண்டு தாயகத்துக்கு போனால் எல்லோரும் தன்னை ஒரு பெருந்தன்மையோடு பார்ப்பார்கள். "அட நிலவன் ஒரு வெளிநாட்டுக்காரியை கட்டிக்கொண்டு வந்திருக்கிறான். நிலவன் பெரிய ஆள் தான்" என்று சொல்வார்கள் என்று நினைப்பு நிலவனுக்குள். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்துவிட்டது. ஆறு மாதங்கள் வரையில் பெரிய பிரச்சனைகள் எதுவுமின்றி அவர்களது குடும்ப வாழ்க்கை ஓடியது. அதன் பின்னர் இருவருக்கும் ஒருசில கருத்துவேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து, சடுதியாக அவர்களிடையே இடைவெளி அதிகரித்து, வெகு விரைவில் பிரிந்து விட்டார்கள்.



மீண்டும் நிலவன் தனிமைப்படுத்தப்பட்டு தனியாகவே வாழ்ந்துவந்தான். நிலவனுக்கு தெரிந்தவர்கள் "நிலவன் நீங்கள் இப்படி தனியாக இருப்பது சரியில்லை. இப்படி எவ்வளவு காலம் தனியாக இருப்பது. உங்களுக்கென்று ஒரு துணை வேண்டும். இந்த வெளிநாட்டுகாரியை எல்லாம் விட்டுப்போட்டு நாட்டில் போய் நல்ல நம்முடைய தமிழ் பிள்ளையை கலியாணம் செய்துகொண்டு வாங்கோ. வந்து நல்லா வாழப்பாருங்கோ" என்று அறிவுரை கூறினார்கள்.



நிலவனும் "அவர்கள் சொல்வதும் சரிதான். இப்படி இருந்து நான் என்ன செய்வது. தனியாக இருந்து யோசிக்க யோசிக்க வருத்தம் தான் வரும். தெரிந்தவர்கள் கூறுவது போல் நான் ஒரு கலியாணத்தை செய்தால் என்ன?" என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான். படுக்கைக்குப் போகும்போதெல்லாம், யோசித்தான், படுக்கையில் சாய்ந்தான், புரண்டான், அடுத்த முடிவு என்ன ? என்ன என்ற கேள்வி அவனுள் ஓயாமல் ஒலிக்க ஆரம்பித்தது.



இறுதியில் ஓர் முடிவையை எடுத்தான். இன்னொரு திருமணம் செய்யத்தான் வேண்டும். அவனது சொந்தம் பந்தம் தெரிந்தவர்கள் என அனைவரிடமும் தனக்கு ஒரு கஷ்டப்பட்ட பெண் ஒன்று பார்க்கசொல்லி சொன்னான். பிறகென்ன பெண் பார்க்கும் படலம் தடல்புடலாக நடந்தது.



அந்த நேரம்தான் மதுசாவுக்கு மாப்பிள்ளை பார்க்கச்சொல்லி மதுசாவின் அண்ணன்மார் கலியாண புரோக்கரிடம் சொன்னார்கள். மதுசாவின் மூன்று அண்ணன்மாரும் நோர்வேயில்தான். நிலவனின் உறவினரும் அதே புரோக்கரிடம் நல்ல பிள்ளை இருந்தால் சொல்லுங்கோ என்று சொல்லி வைத்தனர். பிறகென்ன புரோக்கர் பாடு கொண்டாட்டம் தான் அவருடைய வேலையை அவர் செய்தார். ஆனால் புரோக்கருக்குத் தெரியாது மதுசாவின் அண்ணன்மாருக்கு நிலவன் நண்பன் என்று. நண்பனாக இருந்தும், மதுசாவின் அண்ணன்மாருக்கு, நிலவனுக்கு மதுசாவை திருமணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணம் வந்ததில்லை.



புரோக்கர் மதுசாவின் அண்ணன்மாருக்கு நிலவனைப்பற்றி தெரிவித்தபோதுதான் அவர்களும் இதைப்பற்றி யோசித்துப் பார்த்தார்கள். அண்ணன்மார் மூவரும் சேர்ந்து கதைத்தனர். 'நிலவன் மிகவும் நல்லவன். வெளிநாட்டுக் காரியைத் திருமணம் செய்த ஒன்றுதான் அவன் செய்த பெரிய தவறு. இது அனேகமாக வெளிநாடுகளில் நடக்கும் ஒருவிடயம் தானே. நல்ல வசதியாகவும் இருக்கிறான் நிலவன். இதை மறைத்து விட்டு நாம் கல்யாணத்தை நடத்துவோம். தெரிய வரும்போது சின்ன பிரச்சினை வரும்தான். ஆனால் எங்களுடைய தங்கை மிகவும் பொறுமையானவள். அதை பெரிதாக எடுக்க மாட்டாள் சமாளித்துக்கொள்வாள். இதை பற்றி நிலவனிடம் கதைப்போம்' என்று முடிவெடுத்தனர்.



நிலவனிடமும் கதைத்தனர். நிலவன் "நான் திருமணம் ஆனவன் என்று முதலிலேயே அவவிடம் சொல்லுங்கோ. பிறகு தெரியவரும்போது பிரச்சினை தானே." என்று அவர்களிடம் சொன்னான். அவர்களோ "இப்ப சொல்ல வேண்டாம். நீங்கள் திருமணம் ஆன பிறகு சொல்லுங்கோ. உங்களை போல் ஒரு கணவர் கிடைக்க எங்கள் மதுசா கொடுத்து வைக்க வேண்டும்." என்று சொல்ல நிலவனும் அதை ஏற்றுக்கொண்டான். மதுசா அழகு என்றால் அப்பிடியொரு அழகு. அவள் அழகை பார்ப்பவர்கள் எல்லோரும் 'செதுக்கிவைத்த சிலையைப் போல்' இருக்கிறாளே என்று நினைப்பார்கள்.

மதுசாவோடும் இதைபற்றி அண்ணன்மார் கதைத்தனர். மதுசாவுக்கு நிலவனின் போட்டோ அனுப்பி, அவளின் சம்மதத்தையும் அறிந்தனர். எல்லாம் சரியென்று வந்துவிட்டது . நிலவனோடு மதுசாவை ரெலிபோனில் கதைக்க விட்டனர். மதுசாவும் நிலவனும் ரெலிபோனில் தங்கள் அன்பை பகிர்ந்தனர். நிலவன் மதுசாவோடு கதைக்கும் போதெல்லாம் தனக்குள் ஒரு குற்ற உணர்வு எட்டிப் பார்ப்பதை உணர்ந்தான். என்ன செய்வது அண்ணன்மார் கேட்டுக்கொண்டபடி மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். மதுசாவை இங்கு கூப்பிடுவதற்காக ஸ்பொன்சர் வேலைகளும் எல்லாம் நடந்தது. இப்படியே சிறிது காலத்தில் மதுசாவும் நோர்வேக்கு வந்துவிட்டாள். மதுசா நோர்வேக்கு வந்து ஓரிரு மாதங்களில் திருமண ஒழுங்குகளும் நடந்தன.



மதுசா நிலவன் திருமணம் இனிதாக நடபெற்றது.



படம்: சாமி


பாடல்: இதுதானா



திருமணபந்தத்தில் நுழைந்தவளுக்கு அன்று முதல் இரவு. 'அவர் என்ன கேட்பார். அதுக்கு நான் எப்படி பதில்சொல்வது' என்று ஒரு படபடப்போடு ஆவலாய் அறையில் நுழைந்தாள். அறையில் நுழைந்தவளுக்கு இடி பின்னால் இருப்பது தெரிந்திருக்கவில்லை. அவளும் அறைக்குள் போய் ஒரு வெட்கத்தோடு கட்டிலில் அமர்ந்தாள். நிலவுனுக்குள்ளேயோ 'நான் பெரிய குற்றத்தை மறைத்து இருக்கிறேன். மதுசாவிடம சொல்லத்தான் வேண்டும். எப்படி ஆரம்பிப்பது, எப்படிச் சொல்வது. ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது' என்று ஒரு உறுத்தலாகவும், போராட்டமாகவும் இருந்தது. 'சரி, இன்று எப்படியும் கண்டிப்பாக மதுசாவிடம் சொல்லிவிட வேண்டும்' என்று முடிவெடுத்தான்.



நிலவன் அவள் அருகில் வந்தான். "மதுசா.........." என்றான் மெதுவாக.



"சொல்லுங்கோ" அவள் வெட்கத்துடன் மெதுவாக சொன்னாள்.



"நான் உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும்........" என்று மெதுவாக ஆரம்பித்தான் நிலவன்.



"சொல்லுங்கோ......... என்ன வென்று?" என்று சிரிப்போடு மதுசா கேட்டாள்.



"நான் சொல்லப்போகிற விசயம் நீ கேட்டால், உன் மனநிலை என்ன ஆகும், அதை நீ எப்படி சகித்துகொள்வாயோ தெரியவில்லை. நான் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நான் இதுவரை எப்படி எப்படியோ வாழ்ந்துவிட்டேன். இனி உன்னோடு எப்படி நான் இருக்க வேண்டும் என்று நீ ஆசைப்படுகிறாயோ அப்படியே இருப்பேன். இனி எல்லாமே நீ தான் எனக்கு. இந்த தவறை நான் மட்டும் செய்யவில்லை. உன்னுடய அண்ணன்மார்தான் சொல்லவேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் இனிமேலும் இதை உன்னிடம் மறைக்க என்னுடைய மனம் இடமளிக்கவில்லை மதுசா" என்று நிலவன் பீடிகைபோட்டான்.



நிலவன் இப்படி பேசப்பேச மதுசாவுக்கு குழப்பமாக இருந்தது. என்னதான் சொல்லப் போகிறான் என்று எண்ணியபடியே, மதுசா



குறுக்கிட்டாள் "சொல்லவந்ததை கெதியாய்ச் சொல்லுங்கோ.....".



"ம்............. நான் சொல்கிறேன் ஆனால்................." என்று நிலவன் இழுத்தான்.



"ஏன் நீங்கள் சொல்ல கஷ்டப்படுறீங்களோ. தயவுசெய்து சொல்லவந்ததை சொல்லுங்கோ............." என்று அவசரப்படுத்தினாள் மதுசா.



"சரி மதுசா நான் சொல்லி விடுகிறேன்..........", அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே நிலவன் சொன்னான் "நான் ஏற்கனவே திருமணமானவன்.........".



"என்ன ஏற்கனவேஏஏஏ..............." என்று மதுசா ஒருகணம் தடுமாறினாள். நிலவன் ஒரு நடுக்கத்தோடும், பதட்டத்தோடும் திரும்ப அதையே கூறிவிட்டு சிறிது அமைதியானான்.



மதுசாவின் நெஞ்சில் பேரிடியே விழுந்தது போல் இருந்தது. இவை எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயே ஏன் எவரும் தன்னிடம் கூறவில்லை என்பதே அவளுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது. அவளுக்கு கதைப்பதற்கு வார்த்தைகள் எதுவுமே வரவில்லை. மதுசா சிறு வயதிலே தாய் தகப்பனை இழந்தவள். மதுசா சிறு வயதாக இருக்கும் போது அவர்கள் வீடு திடீர் என்று சிறு தவறால் தீப்பிடித்து விட்டது. அந்த சமயத்துல் மதுசாவின் அப்பாவும் அம்மாவும் வீட்டோடு எரிந்துவிட்டனர். அதன்பின் மதுசா அவளின் பெரியம்மாவுடன் தான் வளர்ந்தவள். மதுசா மிகவும் பொறுமை சாலி, மிகவும் அமைதியானவள். நிலவன் விசயத்தில் இதை எல்லாம் நினைத்து பொறுமையாக சகித்துகொள்ள முடிவெடுத்தாள். இதை மேலும் நிலவனிடம் துருவி கேட்பதற்கு அவள் மனம் இடம் கொடுக்க வில்லை. இதை அனைத்தையும் தன் மனதிற்குள் போட்டுப் புதைத்துக் கொண்டாள்.

சிறியதொரு இடைவெளியின் பின்னர் நிலவன் மீண்டும் "நான் ஒரு நோர்வேஜிய பெண்ணை திருமணம் செய்து இருந்தேன். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இருவரும் பிரிந்து விட்டோம்." என்று மிகச் சுருக்கமாகக் கூறி முடித்துவிட்டான்.



மதுசாவுக்கு மீண்டும் ஓர் இடி........ 'பிள்ளையுமா இருக்கு' என்று தனக்குள் கேள்வி கேட்டு கலங்கினாள். அதுவே அவளுக்கு பெரிய இடியாய் இருந்தது. உண்மையை முதலே சொல்லி இருந்தால் ஒரு வேளை இதன் தாக்கம் குறைவாக இருந்திருக்கலாம். இப்போது அவன் தன்னை ஏமாற்றிவிட்டது போன்ற ஓர் உணர்வு. எங்கேயாவது போய் விடாலாமா என்றுகூட மதுசாவுக்கு தோன்றியது. தன்னுடைய அண்ணன்மார்களை நினைத்து ஒரு கணம் கோபம் தலை உச்சிக்கே ஏறியது. என்ன செய்வது அவளின் பொறுமையான குணத்தால் சகித்துகொண்டு தன் நிலையை நினைத்து, எது நடந்தாலும் இனி இப்படியே வாழ்வது என்று முடிவுடன் போய் படுக்கையில் சாய்ந்தாள். அவள் தனது முடிவை மறு நாளிலிருந்து செயற்பாட்டுக்கும் கொண்டு வந்தாள்.



நிலவனும் அவளிடம் மிகவும் அன்போடு நடந்து கொண்டான். அவளும் நடந்தவற்றை தனது முடிவின்படியே முற்றிலுமாய் மறந்து விட்டு, அவனுடன் இனிதான இல்லறத்தை நடாத்தத் தொடங்கினாள். எந்தவித காரணத்தினாலும் இருவரின் வாழ்க்கையிலும் வேறு எந்த ஒரு கசப்பும் இல்லாமல் இப்படியே இரண்டு வருடம் உருண்டது. திடீர் என்று நிலவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் வந்துவிட்டது.



"நிலவன் வாங்கோ ஹொஸ்பிற்றலுக்கு போவோம்".



"வேண்டாம் மதுசா. பார்த்து போவோம்" என்று புரண்டு படுத்தான் நிலவன்.



"இல்லை நிலவன் வாங்கோ போவோம்" வற்புறுத்தினாள் மதுசா.

மதுசாவின் கரைச்சல் தாங்க முடியாமல் நிலவனும் புறப்பட்டான். இருவரும் ஹொஸ்பிற்றலுக்கு போனார்கள் டொக்டரும் வந்தார். அவனது உடலை செக் பண்ணினார்.



மதுசாவை டொக்டர் தனியாக அழைத்தார். உனது கணவருக்கு கேன்சர் என்று அறிவித்தார். மதுசாவின் கண்கள் கண்ணீர் குளம் ஆகியது. என்ன செய்வது என்று அறியாத நிலையில் இருவரும் வீடு திரும்பினார்கள். நிலவனை அடிக்கடி ஹொஸ்பிற்றலுக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. இரண்டு வருடங்கள் இப்படியே வீடும் ஹொஸ்பிற்றலுமாக அலைந்தார்கள். மதுசா அவரது அண்ணன்மாருக்கும் இதை அறிவித்திருந்தாள். இந்த இரண்டு வருடத்திற்குள் மதுசா நிலவனோடு பட்ட பாடு சொல்லமுடியாது. இருவருக்கும் உடல் ரீதியாக எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்றும் டொக்டர் சொல்லிவிட்டார்.



நிலவன் மதுசாவை பார்த்து, "நீ பாவம் மதுசா. உனக்கு ஏன் இந்த நிலை" என்று கவலைப்படுவான். அதே நேரம் அவனுக்குள், 'தான் உயிரோடு இருக்கும் போது தன்னை விட்டு அவள் போய் விடுவாளோ, வேறு யாரையும் கல்யாணம் செய்துவிடுவாளோ' என்ற ஒரு பயமும் இழையோடியது. இந்த வருத்தம் வந்த பிறகு இவனுடைய மனநிலையில் குழப்பம், மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.



எங்கேயாவது இருவரும் வெளியில் போவார்கள். யாராவது தெரிந்தவர்கள் வந்தால், சந்தோசமாக கதைப்பார்கள். மதுசாவும் கதைப்பாள். அவர்கள் சொல்வார்கள் "உன் மனைவி அழகானவள். நல்லா கதைக்கிறாள்" என்று. அது நிலவனுக்குப் பிடிக்காது. வீட்டுக்கு வந்தவுடன் குடிப்பான். மதுசாவோடு சண்டை பிடிப்பான். "நீ அவர்களை பார்த்து சிரித்தாய், கதைத்தாய்" என்று ஏதாவது குற்றப் பத்திரிகை வாசிக்க ஆரம்பிப்பான்.
"நீங்கள் என்னை இனிமேல் வெளிய கூப்பிடாதையுங்கோ. நானும் வரமாட்டேன்" என்று சொல்லி மதுசா அழுவாள்.




ஆனால் அதே நிலவன் மறுநாள் மதுசாவைப் பார்த்து "மதுசா நேற்று உன்னோடு நான் சண்டை பிடித்தேன். என்னை மன்னித்துக்கொள்" என்பான். "நான் நீண்ட நாளுக்கு உயிரோடு இருக்க மாட்டேன். நான் செத்துவிட்டால் நீ இன்னொரு திருமணம் செய்து நல்லா வாழவேண்டும். சரியா?" என்றும் சொல்லுவான்.



மதுசாவின் வாழ்க்கைக்காலம் கண்ணீரும் கவலையுமாகத்தான் உருண்டபடி இருந்தது. சில காலத்தில் நிலவனுக்கு உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டு வந்தது.



டொக்டர் பார்த்துவிட்டு இன்னும் ஐந்து மாதம் தான் இவர் உயிரோடு இருப்பார் என்று கூறிவிட்டார். ஐந்து மாதமும் ஹொஸ்பிற்றலில்தான் நிலவன் இருக்க வேண்டும் என்றும் கூறி விட்டார்.



மதுசாவின் அண்ணன்மாரும் வந்து போவார்கள். அவர்களை பார்க்கும் போதெல்லாம் மதுசாவுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கும். அதே நேரம் 'அவர்களை நொந்து என்ன செய்வது என் தலை விதி இப்படி அமைந்து விட்டது. யார் என்ன செய்ய முடியும்' என்று தன்னைத்தானே சாமாதானப்படுத்திக் கொள்வாள். இப்படியே ஐந்து மாதத்தில் இரண்டு மாதம் கழிந்து விட்டது. நிலவனின் நிலையும் மிகவும் கவலைக்கிடமானது. மதுசாவுக்கும் ஹொஸ்பிற்றலிலேயே தங்குவதற்கு வசதியும் கொடுக்கப்பட்டிருந்தது.



ஒவ்வொருநாளும் நிலவனின் முகத்தை மதுசா பார்க்கும் போதெல்லாம் அவள் உயிர் அவளிடத்தில் இல்லை.



"மதுசா நான் இன்னும் மூன்று மாதத்தில் உன்னை விட்டுப் பிரிந்துவிடுவேன்". அவன் கண்களில் நீர் வழிய கூறுவான். மதுசாவும் அவன் முகத்தை தன் நெஞ்சோடு அணைத்துகொண்டு, ஒரே கண்ணீரும் கவலையுமாகத்தான் இருப்பாள். இப்படியே போய் நிலமை மோசமாகி நிலவனால் சரியாகக் கதைக்கமுடியாத நிலமைக்குப் போய் விட்டது. மதுசாவின் நிலையை எப்படி சொல்வது. யாரும் அவள் முகத்தை பார்க்கமுடியாது அவ்வளவு வேதனையாக இருக்கும்.



நிலவனுக்கு இறுதி நேரம் வந்துவிட்டது. மதுசாவின் மடியில் அடிக்கடி தலை வைத்துப் படுத்துக் கொள்வான் நிலவன். அவன் உயிர் பிரியும் போது மதுசாவின் மடியில்தான் போகவேண்டும் என்று அடிக்கடி சொல்வான். ஒருநாள் அவன் ஆசைப்பட்ட படியே அவள் மடியில் படுத்தவாறே அவன் உயிரும் அவனைவிட்டு பிரிந்துவிட்டது.



மதுசா இவ்வளவு காலமும் அழுது அழுது, அவன் இறந்தவுடன் மதுசாவின் கண்களில் கண்ணீரை இல்லை யென்றுதான் சொல்லலாம். காரணம் அவள் கண்களில் கண்ணீர் வற்றி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நிலவனும் போய்விட்டான். மதுசாவை தனிமை வாட்டியது. மதுசாவின் தனிமை வாழ்க்கை மூன்று வருடம் இருக்கும். அதன் பின் அண்ணன்மார் மதுசாவை இப்படியே விடுவது சரியில்லை என்றும், அவளுக்கு என்று ஒரு துணை வேண்டும் என்றும், எங்கேயாவது நல்லவனாய் ஒருவனைத் தேடி மதுசாவுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.



அந்த நேரம்தான் மதுசாவின் கனடாவில் இருக்கும் சொந்த மச்சான் அமலன் நினைவிற்கு வந்தான். அமலனுக்கு நான்கு பெண் சகோதரர்கள். அவர்களை கரைசேர்க்கவேண்டும் என்று அவன் திருமணம் செய்யாமலே இருந்தான். பெண் சகோதரர்களையும் கரை சேர்த்தாயிற்று என்று அவன் நிம்மதியுடன் இருந்தான். அவனுடைய சகோதரர்கள், தாய் தகப்பன் எல்லோரும் தாயகத்தில் தான் இருந்தார்கள். நாம் எல்லோரும் மறப்போமா? அனைவருடைய மனதையும் ஒரே நேரத்தில் சுக்குநூறாக்கிய சுனாமி வந்தபோது, அமலனின் குடும்பத்தில் ஒரே ஒரு சகோதரியை தவிர மற்ற எல்லாரையும் சுனாமி காவு கொண்டது.



அதோடு அவன் வாழ்க்கையே தொலைத்துவிட்டதாய் எண்ணி இருந்தான். 'இனி எனக்கு வாழ்க்கையில் எல்லாமே என் சகோதரிதான்' என்று ஒரு முடிவோடு இருந்தான். அவனது சகோதரி அவனை அப்பிடி இருக்க விடவில்லை. "நீ ஒரு திருமணம் செய்ய வேண்டும். நமது குடும்பமே அழிந்து விட்டது. உனக்கென்று ஒரு குடும்பம் வேண்டும" என்று அவள் அவனை ஆறுதல் படுத்தி அவனை ஒருவாறு திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டாள்.



அமலன் சகோதரியிடம் ஒரே ஒரு வேண்டுகோள் வைத்திருந்தான்.



"நான் திருமணம் செய்வதாக இருந்தால் ஒன்று கணவன் இறந்த விதவையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சுனாமியால் பாதிக்கப்பட்ட, யாருமே இல்லாத ஒரு பெண்ணாக இருக்க வேண்டும்".



இதை கேள்விப்பட்ட மதுசாவின் அண்ணன்மார் மதுசாவுக்கு பேசி முடித்துவிடுவோம் என்று கதைத்தனர். அமலனோடும் கதைத்தனர் அமலனும் இதை ஏற்றுக்கொண்டான். ஆனால் மதுசாவுக்கு இதில் கொஞ்சம்கூட ஈடுபாடே இல்லை. அண்ணன்மாரும் இதை விடவில்லை. மதுசாவை வற்புறுத்தி ஏற்கவைத்தனர்.



ஒருநாள் ஓய்வாக இருந்த ஒருவேளையில், மதுசாவுக்கு தொலைபேசி அழைப்பு.........



மதுசா: ஹலோ......... ஹலோ யார் கதைக்கிறீங்கள்........

அமலன்: நான் அமலன். மதுசா என்ன செய்றீங்கள்? நலமா?.....



மதுசா: ம்............. நீங்கள் என்று ஒரு வேண்டா வெறுப்போடு பதில் அழித்தாள்.

அமலன்: ஏன் மதுசா என்னோடு கதைக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா. சலிப்போடு பதில் வருகிறது.



மதுசா: இல்லை... சொல்லுங்கோ.

அமலன்:நம் இருவருக்கும் திருமணம் பேசி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே. இதில் உங்களுக்கு

விருப்பம் இல்லையா?



மதுசா: நான் அப்பிடி ஒன்றும் சொல்லவில்லை. நான் ஏற்கணவே திருமணம் ஆனவள். நீங்கள் அப்பிடியில்லை. நீங்கள் ஏன் என்னை திருமணம் செய்வதற்கு நினைக்கிறீர்கள். நான் எப்படி எனது பழைய வாழ்க்கையை மறப்பது? அது கலியாணமாக மட்டும் இருந்தால், நான் ஒரு வேளை மறந்துவிடலாம். அந்த வாழ்க்கையே நானாக இருக்கும் போது எப்படி இன்னொருவரோடு வாழ்வதற்கு என் மனம் இடம்கொடுக்கும். அதை அனுபவிக்காத உங்களுக்கு இது விளங்காது அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்று மூச்சுவிடாமல் கூறினாள்.



அமலன்: எல்லாம் தெரிந்துதான் நான் உங்களை திருமணம் செய்வதற்கு சம்மதித்தேன். நான் எந்த வகையிலும் உங்கள் மனம் நோக நடக்க மாட்டேன். நானும் என் குடும்பத்தையே இழந்துவிட்டு நிற்கிறேன். உங்களுக்கு தெரியும் தானே. நானும் எல்லாவிதமான கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டேன். எனக்கும் தெரியும் கஷ்டம் என்றால் என்ன வென்று. அதனால் தான் இப்படியொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தேன். எனக்கு திருமணம் ஒன்று நடந்தால் அது இப்படிப்பட்ட ஒரு பெண்ணோடுதான் இருக்கவேண்டும். எனது குடும்பம் அந்த பாழாய்ப் போன சுனாமி அழிந்தவுடன் முடிவெடுத்தேன். நான் உங்களை எந்த வகையிலும் வேதனைப்படுத்த மாட்டேன் சரியா மதுசா.

என்று தனது ஆதங்கங்களை கொட்டி தீர்த்தான்.



மதுசா மவுனமாக இருந்தாள்.



அமலன் மீண்டும் "என்ன மதுசா?





இதுக்கு மேலும் உங்களுக்கு என்னைத் திருமணம் செய்வதில் விருப்பமில்லையா?" என்று கேட்டான்.



மதுசா "உங்களுடைய கஷ்டமெல்லாம் எனக்கு விளங்காமல் இல்லை. நான் எல்லாம் அனுபவித்துவிட்டேன். ஆனால்....................நீங்கள்..................." என்று வசனத்தை முடிக்காமல் நிறுத்தினாள்.



அமலனோ "இனி நீங்கள் இப்படி கதைக்க கூடாது. நீங்கள் திருமணம் ஆனவர் என்று நான் ஒரு போதும் நினைக்க மாட்டேன் சரியா." என்று கேட்டான்.



மதுசா "ம்........................" என்று ஒற்றைச் சொல்லாய் பதில் கொடுத்தாள்.



அமலன் மீண்டும் "ஒகேதானே? இப்ப எல்லாம் சரிதானே........... ? என்னை உங்களுக்கு பிடித்து இருக்குத்தானே?" என்று கேள்விகளை தொடுத்தான்.



மதுசா அதற்கும் "ம்.................. " என்று ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு நிறுத்திக் கொண்டாள். அமலனின் நல்லெண்ணமும், இந்த இளம் வயதில் எவருடைய துணையுமின்றி எப்படி தனியாக வாழப் போகிறோம் என்ற பயமும் அவளை இந்த வாழ்வுக்கு சம்மதம் தெரிவிக்க வைத்தது.



இதே சமயம் கனடாவில் அமலனுக்கு அந்த நாட்டில் இருக்க கூடிய அனுமதியும் இல்லை, விசாவும் இல்லை. மதுசா தான் அவரை நோர்வேக்கு கூப்பிட்டாக வேண்டும். அமலனை தாயகத்துக்கு திரும்பி போகும்படியும், தான் பின்னர் ஸ்பொன்சர் செய்து நோர்வேக்கு கூப்பிடுவதாகவும் மதுசா அமலனிடம் தெரிவித்தாள். அதே போல் அமலனும் தாயகத்துக்கு போனான். மதுசாவும் தாயகத்துக்கு போய் இருவரும் ஒரு கோவிலில் தாலி கட்டிவிட்டு, தங்கள் திருமண வாழ்க்கையை தொடர்ந்தனர்............



தற்போது அமலனும் நோர்வேக்கு வந்துவிட்டார் இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர்.



படம்: பவர்


பாடல்: மலரே நீ வாழ்க

என் வாழ்வே உனக்காக

என் வாழ்வே உனக்காக

-----------------------------



1990 ம் ஆண்டு நாட்டின் போரின் காரணமாக சந்துருவின் குடும்பம் இடம் பெயர்ந்து இந்தியாவுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். தனுஸ்கோடியை அடுத்து இராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் மண்டபம் முகாமில் மூன்று நாட்களாக அங்கே அவர்களுக்கு தங்குவதற்குரிய வசதிகள் கொடுத்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஈரோடு மாவட்டத்தில் ஒரு முகாமிற்கு அவர்களையும் சேர்த்து ஒரு 100 குடும்பத்தை அனுப்பினார்கள். சந்துருவின் குடும்பத்தவரால் இரண்டு மாதங்கள்தான் அந்த முகாமில் இருக்க முடிந்தது. பின்னர் அவர்கள் வீடு வாடகைக்கு ஒன்று எடுத்து முகாமைவிட்டு வெளியேறி விட்டனர்.



நாட்டில் வசதியாக வாழ்ந்தவர்கள். அகதி முகாமில் அந்த குறுகிய இடத்தில் அவர்களால் சமாளித்துக் கொள்ள முடியவில்லை.



இந்த வேளையில் சந்துருவும் பாடசாலைப் போகத் தொடங்கி விட்டான்.

9 ம் வகுப்பில் போய் சேர்ந்தான் சந்துரு. சந்துரு படிப்பில் நல்ல கெட்டிக்காரன். லேசில் யாருடனும் பழகவே மாட்டான். அதுவும் பெண் பிள்ளைகள் என்றால் சொல்லத் தேவையே இல்லை.



இந்த நிலையில் அதே வகுப்பில் வந்து சேர்ந்தாள் சந்தியா. சந்தியாவுக்கு சிறுவயதிலே அப்பா இறந்து விட்டார் அம்மாவுடன்தான் இருந்தார். சந்தியாவின் குடும்பமும் அதே அகதி முகாமில்தான் இருந்தார்கள். சந்தியா மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்.



அகதி முகாமில் பதினைந்து நாளுக்கொருதடவை குடும்பத் தலைவருக்கு 100 ரூபாவும் அதற்குப் பிறகு பிள்ளைகளின் வயதுக்கு ஏற்றவாறு பணமும் வழங்கப்படும். அதில் சந்தியாவுக்கு 80 ரூபா கொடுக்கப்படும்.



ஒரு குடும்பத்தில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒரு மாதத்துக்கு ஒருமுறை. அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அந்தப் பணம் எந்த மூலைக்கு காணும்? அவர்களுக்கு ஆண் துணை இருந்தால் கூலி வேலை செய்தாவது குடும்பத்தைக் கொண்டு நடத்தலாம். அவர்களுக்குத்தான் ஆண் துணையே இல்லையே. சந்தியாவின் தாயார்தான் கட்டிட வேலைக்குப் போய் சந்தியாவை படிக்க வைத்தார். பாடசாலை விடுமுறை நாட்களில் சந்தியாவும் தாயாருடன் சேர்ந்து கட்டிட வேலைக்குப் போய் வருவாள்.



இந்த நிலையிலும் சந்தியாவுக்குப் 10 ஆம் வகுப்பும் முடிந்து விட்டது. பெற்ற தாய்க்கு தன் மகளை பெரிய படிப்பு படிப்பித்து ஒரு டொக்ராகவோ அல்லது ஒரு இஞ்ஜீனியராகவோ ஆக்க வேண்டும் என்ற கனவுகள்தான் எப்போதும். எப்படியாவது மகளை நல்ல நிலைமையில் படிக்க வைத்து விட வேண்டும் என்பது சந்தியாவின் தாயின் நோக்கம். எந்தத் தாய்க்கும் தன் பிள்ளை நன்றாக

படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆசைதானே இருக்கும்.



இவர்கள் இருவரையும் பல தடவை சந்துரு கவனித்து வந்தான். அவனை அறியாமலேயே அவர்களை நினைத்து கவலைப்படுவான்.



பாவம் சந்தியா. சந்தியாவின் தாயும் மகளை படிக்க வைக்க வேண்டும் என்று ஆண்துணை இல்லாமல் வயதானா காலத்திலும், இந்தக் கொளுத்தும் அகோர வெய்யிலிலும் நின்று வேலை செய்து தன் மகளை படிக்க வைக்கின்றாவே..?



இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தானும் உதவி செய்ய வேண்டும் என்று சந்துருவின் மனதில் ஓர் எண்ணம் எழுந்தது. அந்த எண்ணமே அவனுக்கு சந்தியாவோடு கதைக்க வேண்டும் என்ற ஒர் உற்சாகத்தையும் கொடுத்தது.



பாடசாலையில் இருக்கும் போதும், சந்தியா எங்கு சென்றாலும் எந்தப் பக்கம் நின்றாலும் சந்துருவின் பார்வை அங்கே சென்றது. எப்படியாவது சந்தியாவிடம் பேசி விட வேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால் மனதுக்குள் ஓர் தடுமாற்றம்..... எப்படி கதைப்பது?.... என்னவென்று ஆரம்பிப்பது?....



இப்படியே போராட்டத்திலேயே பல நாட்கள் கடந்தன.



சந்தியாவும் சந்துருவைப் பார்க்கும் போதெல்லாம்.... சந்துரு நல்ல கெட்டிகாரனாக இருக்கிறான். நல்லா படிக்கின்றான். ஆனால் யாருடனும் கதைக்க மாட்டன் என்கிறானே..? என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டு போய் விடுவாள்.



ஒரு நாள் பாடசாலை இடைவேளை நேரம். சந்தியா தனிமையாக இருந்து ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்தாள். இதை சந்துரு அவதானித்தான்.



காலையில் இருந்து சந்தியாவின் முகம் மிகவும் சோகமாக உள்ளதே.

ஏன்?..... எதுக்காக?....அவளிடம் போய் காரணத்தைக் கேக்கலாமா?....

என்று நினைத்தவனும்..... இல்லை வேண்டாம்... என்று தனக்குள்ளே குளம்பியவாறு நின்றான்.



இல்லை இன்று சந்தியாவோடு எப்படியாவது கதைக்க வேண்டும். இந்த வேளையில்.... விடிந்தால் மறுநாள் காலாண்டுத் தேர்வு. இதே சாக்காக வைத்து சந்தியாவிடம் கதைப்போம் என்று. சந்தியாவுக்கு அருகில் சென்றான் சந்துரு.



வணக்கம் சந்தியா....



என்ன சந்தியா?.... என்ன ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றீர்கள் போல தெரியுதே?.... நாளை பரீட்சைக்குத் தயாராகி விட்டீர்களா?.... என்று ஒரு தடுமாற்றத்தோடு கேட்டான் சந்துரு.



சந்தியாவுக்கு ஆச்சரியம்..... இது சந்துருவா?.... என்று தன்னையே ஒரு கணம் கேள்வி கேட்டு விட்டு தன்னையே மறந்து நின்றாள்.



சந்துருவின் குரல் மறுபடியும்....... "சந்தியா" என்றழைக்க......



சந்தியா திடுக்கிட்டாள்.



நான் கேட்டதில் ஏதும் கோவமா?......



சீச்சீ..... இது சந்துருவா?.... என்றுதான் யோசிச்சன்.



ஏன் சந்தியா அப்பிடி சொல்லுறீங்கள்?.....



இல்லை..... நீங்கள்தான் யாருடனும் கதைக்க மாட்டீங்களே அதுதான்.....

நான் ஒரு தடைவை குளம்பி விட்டேன் நீங்களா என்னுடன் வந்து கதைக்கிறீங்கள் என்று......



ஏன் நான் உங்களோடு கதைக்கக் கூடாதோ?.....



இல்லை நான் அப்பிடிச் சொல்லவில்லை.



அப்ப எப்பிடி சொல்லுறீங்கள்?.....



ஐயோ ஆளை விடுங்கோ... நீங்கள் நல்லாத்தான் கதைக்கிறீங்கள்...



சந்தியா சரி உங்களிடம் ஒன்று கேக்கலாமா?



தாராளமாகக் கேக்கலாமே...... ம்.........கேளுங்கோ.



கோவிக்க மாட்டீர்கள்தானே?....



இல்லை கேளுங்கோ.



காலையில் இருந்து ஏன் உங்கள் முகம் சோகமாக இருக்கின்றதே ஏன்?....



இல்லை சந்துரு. என் அம்மாவுக்கு வருத்தம் அதுதான் யோசிக்கிறன். அதுதான் கவலையாக இருக்கிறன். என்ன செய்வது என்று எனக்கே தெரிய வில்லை. எனக்கென்று இருக்கும் ஒரே ஓரு துணை என் அம்மாதான். அவாவுக்கும் ஏதும் என்றால் நான் என்ன செய்வேன்?....

என்று கலங்கிய கண்ணோடு நின்றாள் சந்தியா.



கடவுளே!..... இவர்களுக்கு ஏன் இந்த நிலைமை?.... என்று தனக்குள் தானே நினைத்துக் கொண்டு......



சந்தியா கவலைப்படாதீங்கோ. கடவுள் உங்களைக் கை விடமாட்டான். நான் உங்கள் அம்மாவைப் பார்த்து அடிக்கடி மிகவும் பெருமைப் படுகின்றனான். ஆண் துணை இல்லாமல் கஸ்ரப்பட்டு உங்களைப் படிக்க வைக்கின்றார் என்று. ஏதும் வீணாகாது நீங்கள் எதுக்கும் கவலைப்படாதீங்கோ. உங்களுக்கு ஏதும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கோ என்று சொல்லி விட்டு....



சரி சந்தியா நாளை சந்திப்போம் என்று கூறி சென்று விட்டான் சந்துரு.



சந்தியாவுக்கு ஒரே ஆச்சரியம். எவ்வளவு அமைதியாக இருந்தவர் இப்ப இவ்வளவு அருமையாகக் கதைத்து விட்டுப் போகின்றாரே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள். அங்கு நடந்தவை எல்லாவற்றை யும் ஒன்று விடாமல் தன் தாயிடம் கூறினாள் சந்தியா . சந்தியாவின் தாயும்...... ம்..........நல்ல குடும்பப் பிள்ளை போல இருக்கு அதுதான் நல்லமாதிரி கதைச்சு இருக்கு..... என்றாள்.



இப்படியே ஒரு சில ஆண்டுகள் கடந்தன.



இருவரும் 12 ஆம் வகுப்பு முடித்து மேற் கொண்டு கல்லூரிப் படிப்பை தொடர் வதற்கு சந்துரு B.se விண்ணப்பம் போட்டு அதற்குரிய சீட்டும் கிடைத்து விட்டது.



சந்தியா B.com விண்ணப்பம் போட்டு அவளிற்கும் அதற்குரிய சீட்டும் கிடைத்து விட்டது. சந்தியா மேற்கொண்டு பணம் கட்டினால்தான் படிப்பை தொடர முடியும். ஆனால் சந்தியாவால் அவ்வளவு பணம் கட்டுவது என்பது முடியாத காரியம். சந்தியாவின் தாயாரும் தெரிந்த ஒரு சிலபேரிடம் கேட்டுப் பார்த்தார். அவர்களும் இல்லை என்று கைவிரித்து விட்டனர். சந்தியாவின் தாய்க்கோ சரியான கவலை. இவ்வளவு பெரிய தொகையை தன்னால் எப்படிப் புரட்ட முடியும்? என்னால் முடியால் போய் விட்டதே என்ன செய்வது என்று.



ஒரு நாள் சந்துரு வழியில் சந்தியாவை பார்த்தான்.



வணக்கம் சந்தியா.... எப்பிடி இருக்கிறீங்கள்?...



ஓ..... சந்துரு உங்களைக் கண்டு கனநாளாகி விட்டதே....



ஆமாம் சந்தியா. நான் இந்த பார்ட்ரைம் வேலை எடுத்து செய்தேன் அதுதான் இந்தப் பக்கம் அடிக்கடி வரமுடியாமல் போய் விட்டது. அது சரி சந்தியா......

காலேஜ் சீட்டெல்லாம் கிடைத்து விட்டதா? எனக்குக் கிடைத்து விட்டது. கோயம்புத்தூரில்தான் கிடைத்திருக்கின்றது. நீங்கள் எந்த காலேஜ்?... எங்க தொடங்கப் போறீங்கள்?....என்று சந்தியாவைப் பார்த்து சந்துரு கேட்கவும்.



சந்தியா வாடிய முகத்தோடு காலேஜ் சீட்டெல்லாம் கிடைத்து விட்டது என்பது உண்மைதான் சந்துரு....ஆனால்.... என இழுத்தாள்.



என்ன சந்தியா ஆனால்?..... சொல்லுங்கோ



அந்த அளவு பணத் தொகையைக் கட்டுவது என்பது எங்களால் முடியாத காரியம் சந்துரு. அம்மாவுக்கும் வருத்தம். அம்மாவுடைய மனதில் இப்போது இருக்கும் எண்ணமெல்லாம் அவவின் காலம் முடிவதற்குள் என்னை ஒரு நல்ல இடத்தில் கலியாணம் செய்து கொடுத்து விடவேண்டும் என்ற எண்ணம்

மட்டும்தான் சந்துரு.



சரி நான் ஒன்று சொன்னால் கோவிக்க மாட்டீர்கள்தானே சந்தியா?.....



இல்லை சொல்லுங்கோ..... நான் கோவிக்க மாட்டேன்.



அந்த பணத்தை நான் கட்டுறன் நீங்கள் மேற்கொண்டு படியுங்கோவன்.



ஐயோ சந்துரு. அப்படி எல்லாம் வேண்டாம். நீங்கள் சொன்னதே எனக்கு பெரிய சந்தோசம். வேண்டாம் சந்துரு விடுங்கோ.... உங்களுக்கு சிரமம் வேண்டாம். இந்தப் பணத்தை நீங்கள் கட்டி விடலாம் அதற்குப் பிறகு நான் என்ன செய்வது?... ஒவ்வொரு முறையும் நான் உங்களை எதிர்பார்த்து நிற்பதோ?...இது எல்லாம் சரிப்படாது சந்துரு. வேண்டாம் சந்துரு விடுங்கோ. என் தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும்..... என்றாள்.



காதல் வந்தால் யாரைத்தான் விட்டு வைக்கும்?.... இதில் சந்துரு மட்டும் விதிவிலக்கா என்ன?...



சரி பரவாய் இல்லை விடுங்கோ சந்தியா. நீண்ட நாட்களாக உங்களிடம் ஒரு விசயம் கேட்க வேணும் எண்டு காத்திருந்தன். நான் கேட்டால் தப்பாக நினைக்க மாட்டீர்கள் தானே?.. நீங்கள் நினைத்தாலும் நினைக்கா விட்டாலும் நான் கேட்டே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் கையில் உள்ளது.



சரி கேளுங்கோ சந்துரு.....



உங்களை எனக்கு மிகவும் எனக்கு பிடிச்சிருக்கு சந்தியா. நான் உங்களைத் திருமணம் செய்து உங்களோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படுறன். நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீங்கள்?....என்று மூச்சு விடாமல் சந்தியாவிடம் கேட்டான் சந்துரு.



என்ன சந்துரு நீங்கள் யோசிச்சா இதை கேக்கிறீங்கள்?.... இதை நினைச்சால் எனக்கு ஒரே வேடிக்கையாக இருக்கு... உங்கட அப்பா அம்மாவையளுக்கு இது தெரிஞ்சால் எவ்வளவு பிரச்சினை வரும்?.... என்னுடைய குடும்பத்திற்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் ஏணி வைச்சால் கூட எட்டாது.....என்றாள்

சந்தியா.



சந்தியா.... நீங்கள் என்னோடுதான் வாழப் போறீங்கள். என் குடும்பத்தோடு இல்லையே. உங்களிடம் நான் கேட்ட கேள்வி உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?... இல்லையா?.. இரண்டில் ஏதாவது சொல்லுங்கோ... yes or no .



சந்தியா மௌனமாக நின்றாள்.



சந்தியா உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் உடனே உங்களிடம் இருந்து பதில் வந்திருக்கும். என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று. இல்லையா?...நீங்கள் குடும்பத்தை சாக்குப் போக்கு சொல்லாதீங்கோ.... என்று சந்துரு சொல்லும் போதும் சந்தியா மௌனம் சாதித்தாள்.



திரும்பவும் சந்துரு குறுக்கிட்டான். என்ன சந்தியா?.... இந்த மௌனம் சம்மதத் திற்கான அறிகுறிதானே?......



சந்தியாவின் முகம் நிலத்தை பார்த்துக் கொள்ள... வெட்கம் கலந்த சிறிய புன்சிரிப்பு அங்கே பூத்தது.



படம்..................கர்ணா


பாடல்...............மலரே மௌனமா



சரி சந்தியா. இதைப் பற்றி நான் உங்கள் அம்மாவோடு கதைக்க வேணும் என்றாலும் கதைக்கிறன். உங்கள் அம்மா ஏதும் மறுப்பு சொல்லமாட்டாதானே?



தெரியேல்லையே சந்துரு... அப்படி எண்டா.... நீங்கள் அம்மாவை வந்து பாருங்களேன்.... என்று சொல்லி விட்டு சந்தியா அடுத்த பக்கம் திரும்பி நின்றாள்.



சந்துருவின் மனதில் மகிழ்ச்சி பொங்க.... சரி சந்தியா வெக்கப்பட்டதெல்லாம் போதும். நான் நாளைக்கே உங்கட அம்மாவை வந்து பாக்கிறன். சரி நீங்கள் வீட்ட போங்கோ. நானும் வெளிக்கிடுகின்றன்...... நாளை சந்திப்போம்....

என்று கூறியவனும்.....மீண்டும் சந்தியாவைப் பார்த்து.....



சந்தியா இப்ப நான் வீடு வரை கூட வரவேணுமோ?... என்று சிரிப்போடு ஒரு கேள்வி.



சந்தியா சந்துருவைப் பார்த்து.... சீ போங்கோ உங்களுக்கு பகிடி ரொம்பத்தான்...

என்றாள்.



சிரிப்போடு இருவரும் விடைபெற்றனர்.



மறுநாள் அதேபோல் சந்துரு சந்தியாவின் தாயைச் சந்தித்து அனைத்தையும் சொல்லி கேட்டான். அதற்கு சந்தியாவின் தாய் உங்கள் வீட்டில் கதையுங்கோ அவர்கள் சம்மதம் தெரிவித்தால் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்றார்.

எங்கள் வீட்டில் விருப்பப்பட மாட்டார்கள் என்று எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் இதற்கு நீங்கள் சம்மதிதால் நான் உங்கள் மகளை கரம்பிடித்து அவளைக் கண்கலங்காமல் வைச்சுக் காப்பாற்றுவேன்.....அதோடு




எங்கள் வீட்டில் நான் இதைப் பற்றி என்னுடைய அப்பா அம்மாவோட கதைப்பன். கதைக்க மாட்டன் என்று சொல்லேல்லை. எங்கள் வீட்டில் இதற்கு அவர்கள் சம்மதிச்சாலும் சரி சம்மதிக்கா விட்டாலும் சரி நீங்கள் சம்மதிச்சால் நான் உங்கள் மகளை திருமணம் செய்வேன்....... என்றான்.



சரி உங்கள் வீட்டில் கதைச்சுப் போட்டு வாங்கோவன். பிறகு மிச்சத்தைப்

பற்றி கதைப்போம்..... என்றார் சந்தியாவின் தாயார்



சரி எனக் கூறிச் சென்ற சந்துருவும் தன் காதல் பற்றி தன் பெற்றோரிடம் கூறினான். அவன் எதிர்பார்த்தது போலவே சந்துருவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.



மனம் சோர்ந்து போன சந்துருவும்... சந்தியாவின் தாயிடம் வந்து நடந்த வற்றைச் சொல்லி விட்டு.....



எங்கள் வீட்டில் இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீங்கள்?..... என்றான்.



இதனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வராது எண்டால்... எங்களுக்கு ஒண்டும் இல்லை. இதில் எங்களுக்கு பூரண விருப்பம். இனி உங்கள் விருப்பம் போல செய்யுங்கோ..... என்று சந்தியாவின் தாய் பட்டும் படமால் கூறிவிட்டார்.



பிறகு என்ன?.....சந்துருவும் சந்தியாவும் ஆறு மாதகாலமாக காதர்களாக வலம் வந்தனர். அவர்களை அக்கம் பக்கம் உள்ளர்கள் பார்த்து பொறாமைப் படக்கூடிய அளவிற்கு இருவரும் காதலர்களாகப் பறந்து திரிந்தனர்.



படம்...................நிறம் மாறாத பூக்கள்


பாடல்.................இரு பறவைகள் மலை முழுவதும் அங்கும் இங்கும்



ஒருசில மாதங்களில் திருமணமும் நடந்து அதே அகதி முகாமிற்கு குடி வந்தார்கள் தம்பதிகள். அந்த அகதி முகாமில் மின்சார வசதி இல்லை. வசதியான வாழ்க்கை வாழ்ந்த சந்துருவுக்கு இந்த வாழ்க்கை கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. ஆனாலும் என்ன செய்வது?... ஒன்றை அடைய வேண்டும் என்றால் மற்றொன்றை இழக்கத்தானே வேண்டும்?.... என்று தனக்குள் தானே நினைத்துக் கொண்டு சந்தியாவை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான் சந்துரு.



இனி என்ன குடும்ப வண்டியை ஓட்ட வேண்டுமே?...இந்த சமயம்தான் வேலை தேடி ஒரு மலை உச்சியில் கல் குவாரி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தான் சந்துரு. அந்த அகோர வெய்யிலில் மலைகளில் ஏறிக் கல் உடைப்பது என்பது லேசானா காரியம் இல்லை. கல் உடைக்கும் வேலை என்றால் யோசித்துப் பாருங்களேன். அதுவும் இந்தியாவில் அந்த கொழுத்தும் வெய்யிலில் எவ்வளவு சிரமம் என்று...



சந்துருவின் அப்பா அம்மாவுக்கு விருப்பம் இல்லாமல் நடந்த கலியாணம் என்றதால்...அவர்களுக்கு முன் தானும் நல்லா இருக்க வேண்டும். தன் மனைவி சந்தியாவையும் ஒரு குறையும் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், சிந்தனையும் சந்துருவின் மனதில்.



வீட்டுக்குத் தேவையான பொருட்கள், மின்சார வசதியுடைய பொருட்களுக்கு பெற்றறி போட்டுப் பாவிக்கக் கூடிய மாதிரி, ரிவி முதல் தொட்டு பேன், மிக்ஸி, பிறிச் என்று அனைத்துத் தளபாடங்களையும் வாங்கிக் கொடுத்தான்

சந்துரு.



அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தியாவுக்கு வந்த வாழ்க்கையை நினைத்துப் பொறாமைப்படும் அளவிற்கும், வாயில் கை வைத்து ஏங்கும் அளவிற்கும் இருவரும் கூடி வாழ்ந்தனர்.



இப்படியே அவர்கள் வாழ்க்கை உருண்டோடியது. இரண்டு ஆண்டுகளில் சந்துருவுக்கும் சந்தியாக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டு வயதும் ஆகிவிட்டது. அந்தக் குழந்தைக்குச் சரிதா என்று பெயரும் சூட்டி மகிழ்ந்தனர்.



இவர்கள் வாழ்க்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை அல்லது வசதி வாய்ப்பைக் கண்டவுடன் சந்தியாவின் மனம் தடுமாறி விட்டதோ தெரிய வில்லை. அல்லது சந்தியா வேறு விதமாக நினைத்தாளோ தெரியவில்லை. அல்லது கூலி வேலை செய்பவனோடு ஏன் குடும்பம் நடத்த வேண்டும் என்று நினைத்தாளோ பாவி தெரியவில்லை.



சந்தியாவின் வாழ்க்கையில் இன்னொருவன் குறுக்கிட்டான்.



அவன்தான் சிவா.



சந்துரு வேலைக்குப் போனபின் சந்தியா சிவாவின் வீட்டுக்குப் போவதும் அவனோடு வெளியில் போவதும் வழக்கம் ஆகி விட்டது.



சந்தியாவுக்கும் சிவாவுக்கும் எதோ தொடர்பாம்.... என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் அரசல் புரசலாக பேசிக் கொண்டனர்



இது சந்துருவின் காதிலும் விழுந்தது.



சந்துரு தன் மனைவிமேல் வைத்திருக்கும் அன்பிலும் பாசத்திலும் நம்பிக்கையிலும் அவன் அதையெல்லாம் காதில் போடவில்லை. நல்லா இருந்தால் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பிடிக்காதுதானே. என்று தனக்குள் நினைத்துவிட்டு இதைப்பற்றி சந்தியாவிடமும் அவன் ஏதும் கேட்கவில்லை.



சந்தியாவின் கதையும் சிவாவின் கதையும் மிக மோசமாக பரவியது. சந்துருவின் வேலைதளம் வரைக்கும் போய் விட்டது. சந்துருவின் ஒரு நல்ல நண்பன் சந்துருவிடம் வந்து கூறினான். சந்துரு இப்படி கதை அடிபடுகிறது நானும் இரண்டு தடவை சந்தியாவையும் சிவாவையும் வெளியில் பார்த்தேன். நீ எதற்கும் உன் மனைவியிடம் போய் கதைத்துப்பார் என்றான்.



நான் என் மனைவியை நம்பித்தான் குடும்பம் நடத்திறன் அவள் எனக்குத் துரோகம் செய்ய மாட்டாள். அப்படி அவள் செய்தாலும் கூட யாரும் சொல்வதை நான் நம்ப மாட்டேன். நான் என்றைக்கு அதை நேரடியாகப் பார்க்கின்றேனோ அன்று என் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்வேன். என்று சந்துருவும் தன் நண்பனிடம் கூறி விட்டு வீட்டை நோக்கிச் சென்றான்.



வீட்டில் வந்து சந்தியாவிடம் நடந்தவை எல்லாவற்றையும் கூறினான் சந்துரு. அதற்குத் தான் இப்படி ஓர் பதிலையும் கூறி விட்டு வந்தேன் என்றும் கூறினான். அதற்கும் சந்தியா ஒன்றுமே சொல்லவில்லை.



இப்படித்தான் ஒரு நாள் காலை 6 மணியளவில் டொய்லெட் போவதற்காக வெளியே வந்தான் சந்துரு. அகதி முகாம்களில் பாத்ரூம் வசதிகள் எல்லாம் பெரும்பாலும் இருப்பதில்லை. திறந்த வெளியில் காட்டிற்குதான் போக வேண்டும். சந்துருவும் எழுந்தவுடன் டொய்லெட்டுக்கு போய்விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தான். அந்த நேரம் பார்த்து சிவாவின் வீட்டுக்குள் இருந்து சந்தியா வெளியே வந்தாள். அகதி முகாம்களில் ஒரு லைனில் 10 வீடுகள் இருக்கும். சிவாவின் வீட்டை தாண்டித்தான் சந்துருவின் வீட்டுக்குப் போக வேண்டும். சந்துரு சந்தியாவைப் பார்த்தவுடன் அவன் நெஞ்சே கலங்கி விட்டது.



எத்தனைபேர் சொல்லியும் என் சந்தியாமேல் நான் சந்தேகப்படவில்லை. என் சந்தியாவா இப்படி?.... என்று தனக்குள்ளேயேதான் வெந்து வெதும்பி குறுகிப் போனான்.



உள்ளே வந்த அவனும் சந்தியாவைப் பார்த்து ஒன்றுமே கேட்கவில்லை. அப்படியே தன் மகளை தூக்கி நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு வழமை போலவே வேலைக்குச் சென்றான். வேலைக்குச் சென்றவனால் வேலையைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அரை நேரத்தோடு வேலைக்கு லீவு சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தான். வீட்டுக்குள்ளே சந்தியா நின்று கொண்டி ருந்தாள். சந்துருவைப் பார்த்தவுடன் சந்தியாவுக்கு ஒரு கணம் இதயத் துடிப்பே நின்றது போல் ஒரு பயம் ஏற்பட்டது. அந்தச் சமயம் சந்தியா 6 மாத கர்ப்பிணியாகவும் இருந்தாள். சந்துருவின் முகத்தை அவளால் பாக்க முடியவில்லை. சந்துருவும் சந்தியாவின் முகத்தைப் பாக்கவில்லை.



நேராக சமையலறைக்குள் சென்றான் சந்துரு.



நல்ல கூரான கத்தி ஒன்றை எடுத்தான். திரும்பி சந்தியா நிற்கும் இடத்தை நோக்கி வந்தான். சந்தியா அவனை பார்க்காமலேயே நின்றாள். சந்துரு சந்தியாவின் தலை முடியை இழுத்து பிடித்து தன் கைக்குள் சுருட்டிக் கொண்டான். தொடர்ந்து மூன்று குத்து கத்தியால் தொடர்ந்து குத்தினான். சந்தியா அலறிக் கொண்டு சந்துருவின் கையில் இருந்து வெளியே சென்றாள். அவன் அவளை விடவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடி விட்டார்கள். ஒருவரையும் கிட்ட நெருங்கக் கூடாது என்று சொல்லி விட்டான். பிறகென்ன யார்தான் வருவார்கள்? அதுவும் கணவன் மனைவி பிரச்சினைக்குள்?..... சந்தியாவைப் பிடித்து தொடர்ந்து 16 கத்திக் குத்துக்கள் அவள் மேல் சரமாரியாக குத்தினான். அவளின் உயிர் அதே இடத்தில் பிரிந்தது.



அவ்வளவுதான். சந்துரு தன் மகளையும் தூக்கிக் கொண்டு நேராக காவல் துறையை நோக்கி நடந்தான். காவல் துறையில் நடந்தவை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூறி தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்தான். காவல் துறையும் சந்துருவை சிறையில் போட்டார்கள்.



காலங்கள் கரைந்தன.



சிறையிலிருந்து வெளியே வந்த சந்துருவும் தன் மகளுக்குத் தானே தாயாகவும் தானே தந்தையாகவும் இருந்து வளர்த்து வருகிறான். இப்போது

அவன் உயிர் வாழ்வதே அவன் மகளுக்காக மட்டுமே. அவன் உலகமே அவனின் மகள்தான்.



படம்...................


பாடல்:............... எந்தன் வாழ்க்கையில் அர்த்தம் சொல்ல

இசையும் கதையும்.. "பூமகள்"

"பூமகள்"















இசையும் கதையும்....



"கலங்காதிருமனமே! உன்


கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!" கண்ணதாஸன்...



அந்தக்கதையின் ஆரம்பமே அந்தக்கவிஞனின்

நம்பிக்கைக் கீற்றோடு ஆரம்பித்திருந்த

அந்தக்கதாசிரியர் மனதில் உதித்த அந்தக்கதையை

அவன் எத்தனை தடவை வாசித்திருப்பான்!



அந்தக் கதைக்குள் அவன் தன்னைப்பார்த்தான்!

இந்தக்கதை என்மனத்துள் இத்துணைதூரம் இடம் பிடித்துவிட

என்ன காரணம்...என்ன காரணம்...ஏனிந்த மாற்றம்...



என்னுள் பதிந்த கதைக்குள் நானா...

இல்லை...அந்தக்கதையாசிரியர் மனத்துள் நானா...



புரியாத பல புதிர்களுக்கு பதில்தந்த அந்தக்கதை...

இது என்ன விந்தை...என்ன விந்தை..



சந்தைக்கூட்டத்து மந்தைக்கூட்டத்துள்.....

இவன் எப்படி அகப்பட்டான்...அந்த வலைக்குள்

இவன் எப்படி அகப்பட்டான்...



ஆச்சரியமாய் இருக்கிறதே....

அந்தக்காதல்கதையின் கருவே அவனாகவல்லவா தெரிகிறது...



"நினைவுச்சின்னம்" அழகான தலைப்போடு

நினைவுகளைச் சுழலவைத்த அந்தக்கதை....



தன்னினைவுகளோடு பின்னோக்கி அவனனை இழுத்துச்செல்ல............



'கவிதா! இங்கை வாயேன்! இதைக்கொஞ்சம் பாரேன்'...

என்றான் அறிவழகன்!...

'என்ன! என்ன! யாராவது நல்ல கவிதை எழுதியிருக்காங்களா....

இல்லை....யாருடையதாவது நல்ல கதை வந்திருக்கா.....

இல்லை ஐயாவுக்கு நல்ல மூடு வந்திருக்கா.'...



'என்னங்க!....என்னங்க!...

கையில அலுவலாய் இருக்கேன்!...

சொல்லுங்க!.....கேட்டுக்கிறன்'......என்றாள் கவிதா....சமையல் கட்டில்

இருந்துகொண்டே...



"ஏ வெங்காயம்!...அதைவைச்சிட்டு அப்படியே வாடி இங்கே....

வந்து பாரு.....புரியும்....வந்து பாரு கவிதா!"....

என்று ஏக்கத்தோடும் பரபரப்போடும் அழைத்தான் அவன்..



"ம்.....ம்....இனித்தாமதித்தால் ஐயாவுக்கு கோபம் பொத்துக்கிட்டு

வந்திடும்....கோபத்த இறக்குறதென்றால் ரொம்பக்கஷ்டம்....

சாமி மலையேறிட்டால் காடுதாங்காது.."..என்று பொய்க்கு முணுமுணுத்தவாறு

கவிதா...அவனை நோக்கி சென்றாள்....



"இங்க பாரு கவிதா!...எவ்வளவு அற்புதமான கவிதை....

நம்ம இறையன்பு எவ்வளவு அற்புதமாய் விளக்கியிருக்கிறாரு...

பாரு....பாரு."..



அவளுக்கும் கவிதையில் கதையில் நிறைந்த ஆர்வம் இருப்பதை

அவளுக்குள் இருக்கும் அவனுக்குள் தெரிந்ததே..

இன்னும் சொல்லப்போனால்.....

அவனுக்கும் அவளுக்கும் காதல்மலர்ந்ததே...இந்தக்

கலாரசனைகளால்தானே....



"என்னங்க...கையெல்லாம் ஈரமாயிருக்கு...நீங்க படியுங்க...

நான் கேட்டுக்கிறேன்....என்றாள்...முகத்தில் வடிந்துகொண்டிருக்கும்

வெயர்வையை சேலைத்தலைப்பால் துடைத்தபடியே.......



"வாடி! வந்து மடியில் உட்காரு."..என்றபடி அவளை

இழுத்து தன் மடியில் உட்காரவைத்தான் அவன்...



அவளும் நாணங்கொண்டு சிணுங்கியபடியே...'.ம்..சரி...

படியுங்க."..என்றாள் அவள்....



அவள் கண்களின் அழகைப்பருகியபடியே...

சட்டென்று இதழால் முத்தம்பதித்து....

அவளை இறுகப்பற்றியபடியே....



"இந்தா...புத்தகத்தை விரித்துப்பிடித்துக்கோ.....

நான் படிக்கிறேன்"....என்றபடி ஆரம்பித்தான்....



அவளுக்கும் அவனுடைய ஸ்பரிஸம் தந்த கதகதப்பு.....

"ம்......படியுங்களேன்"..என்று சிணுங்கினாள் அவள்..



"பாரு....என்ன அழகா இந்தக்கைக்கூ கவிதைக்கு

விளக்கம் கொடுக்கிறாரு"........



"கீழே செல்லச் செல்ல...மேலே போகிறது வால்- ஒரு திமிங்கிலம்"

இது கைக்கூ...கவிதை...



"இதுக்கு எப்படி விளக்கமளிக்கிறார் அழகாக."...

"ம்...மேல படியுங்களேன்.'....என்றாள் அவள்.....



இறையன்புவின் கட்டுரையென்றால் அது ஒரு தனியழகு....

என்பது அவனுக்கும் அவளுக்கும் தெரிந்த ஒன்றுதான்...



இன்னும் ஒருபடி அவளுக்கு அவருடைய எழுத்தில்

ஓர் பிடிப்பு....".படியுங்களேன்."...அவசரப்படுத்தினாள் அவள்...



"கவனமாகக் கேளு."......என்று தொடர்ந்தான் அவன்...



"திமிங்கிலத்திற்குப்பொருந்துவது மீனுக்கும் பொருந்தும்...

திமிங்கிலம் என்பது சக்தியைக்குறிக்கிறது...



திமிங்கிலத்தின் தலை கீழே போகப்போக

வால் மேலே வருகிறது.....



திமிங்கிலம் தான் என்றில்லை...

நிர்வாகிகளும் அப்படித்தான்....

அதிகாரமும் அப்படித்தான்...



தலை பணிவாக இருக்கிறது...

வால் துள்ளுகிறது...



அதுமட்டுமல்ல...

தலை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்...

வால் மேலே வர வாய்ப்பில்லை...



சில நேரங்களில் நல்ல விசயங்கள்

சொல்லப்படாததாலேயே....

தீய விஷயங்கள் முன் நிற்கின்றன....



நல்ல மனிதர்கள் வெளிச்சத்திற்கு

வரக்கூச்சப்படுவதாலேயே

எடுபிடிகளாக இருக்கவேண்டியவர்கள்

கெடுபிடி செய்கிறார்கள்...



உண்மைகள் உரத்துச் சொல்லப்படவேண்டும்..



இல்லாவிட்டால் பொய்களின் நாட்டியத்தின்

இரைச்சலில்....

உண்மை நாடுகடத்தப்படும்...



தலை சிந்தனைக்குப்பிறப்பிடம்...

வால் கழிவுகளுக்கு அருகில் இருப்பிடம்..



வாலும் தேவையான உறுப்புத்தான்..

ஆனால் நிட்சயம் தலையின் பணியை

அது செய்ய முடியாது...



பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் வால்

மறைந்து போகிறது...மறைந்து போக வேண்டும்...



இருக்கிறதே என்று எல்லா நேரமும்

வாலை உயர்த்திக்கொண்டோ

உபயோகப்படுத்திக்கொண்டோ

இருக்க முடியாது.....



பல்லியின் வாலை நறுக்கினால்....

அது துள்ளிக்கொண்டே இருக்கிறது...



தலையை நறுக்கினால் அது சப்தமில்லாமல்

மவுனித்திருக்கிறது..



வாலைத்தண்டித்தால்....

அது கத்தும்...துள்ளும்..கூச்சலிடும்....



தலையோ தான் தண்டிக்கப்பட்ட

காரணங்களை அலசி ஆராயும்...



திறமை மிகுந்தவர்கள் எல்;லாரும்

மவுனத்தை அடைகாக்க ஆரம்பித்துவிட்டார்கள்...



அதனால் இப்போது அரைகுறை சத்த

சாம்ராஜ்யம் நடந்துகொண்டிருக்கிறது......



ஊதுவத்திகள் மவுனமாக இருக்கின்றன...

மெழுகுவர்த்திகள் அமைதியை அடைகாக்கின்றன...



வால்களுக்கு இருக்கும் பேராசையெல்லாம்

அவை சிறந்த வாலாக இருக்கவேண்டும் என்பதல்ல...



அவையே தலையாகத்தம்மைப்

பாவித்துக்கொள்வதால்....

வால்களெல்லாம் ஒன்று சேர்ந்து தீர்மானம்

போடலாம்...



இனித்தலைகளை எண்ணுவதை எதிர்த்து

வால்களை எண்ண வற்புறுத்துவோம்...



'தலைமை" என்பதை ஒழித்து "வால்மை'

என்று கொண்டு வருவோம்...



வால்களின் எண்ணிக்கை அதிகம்...

அவற்றிலிருந்து தப்பிக்க ஒரே வழி...

சரியான நேரத்தில் அவற்றை உதிர்ப்பது ஒன்றுதான்."..



"அற்புதமான விளக்கமுங்க....அற்புதம்...

இறையன்பு எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்காரு."...



"தலையிருக்க வாலாடும் கூட்டங்களைச் சுட்டிக்காட்டி

தலை என்ன செய்ய வேண்டும் என்று புத்திமதியல்லவா

கூறியிருக்கிறாரு.'.......



"இங்கை கனடாவில தலையிருக்க வாலாடும் கூட்டம்

எவ்வளவு இருக்கு....தலையெல்லாம் என்ன செய்யலாம்

என்று யோசிக்க விடாமல் பதில் சொல்லியிருக்காரு இறையன்பு..".

என்றாள் கவிதா...



"அடிமண்டு......கனடாவில் மட்டுமில்லை....

உலகம் பூராவும் இப்போ இதே நடப்புத்தான்....

தலையெல்லாம் தம்மைப்பிச்சுக்கிற நிலைதான்"...



"என்ன பண்றது.....நாட்டு நடப்பு அப்படியடி."....



"நானும் நீயும் நினைச்சு என்ன பண்றது.....

புரியவேண்டியவங்களுக்கு புரியல்லயே.".....



"நம்ம ஆபீஸ் நிலையும் இதேகதிதான்....

நம்ம டைரக்டர் நம்மிட்ட அன்னைக்கு

கூப்பிட்டு இதைத்தானே பேசிக்கிட்டாரு."...



"அந்தாளு நல்ல மனுசன்...

அந்தாளை சுத்த இருக்கும் கூட்டம் ஒரு வழிபண்ணிடும்போல

இருக்கு....ரொம்பப் பாவமாத்தான் இருக்கு".....



நான் அவருக்கு "குழந்தப்பிள்ளைக்கு குட்டிநாய்க்கும்

இடம்கொடாதையுங்க."..என்று மட்டும் சொல்லிக்கிட்டேன்....



"மனிசன் என்ன நெனைச்சாரோ தெரியல்ல...."



அப்படியே என்னைக் கட்டிப்பிடிச்சு கலங்கிட்டாரு....

"யோசியாதையுங்க ...கவனமாய் இருங்க' ....என்று

சொல்லிட்டு வந்திட்டன்...



"சரி சரி....கவிதா ஒரு காப்பிபோடேன் குடிப்போம்".

என்றான் அறிவழகன்....



'சரி விடுங்க....போட்டிட்டு வாறன்"....என்று எழுந்தவளை

ஏ...வாடி என்றவாறு இழுத்தணைத்து முத்தங்கள் அவள்

கண்களில் பதித்தான்....



அதுஎன்னவோ அந்த கிருஸ்ணகாந்தக்கண்களுக்கு

அவன் அடிமையாகி இரண்டு வருடங்கள்தான்....



இந்த இரண்டு வருடங்களில் எத்தனை முத்தங்களை

அந்த விழிகள் இரண்டும் சந்தித்தித்திருக்கும்....



என்ன அந்த விழிகள்....காந்தமாகி ஒட்டவைக்கும் விந்தை...

வெட்கத்தைவிட்டு சொல்லணும்னா.....



அந்த விழிகள் வாங்கிய முத்தங்கள்தான் ஏராளம்...

அத்தனை அழகுக்கண்கள்.....



(பாடல்....மொழியிலே தெரியுது ....

படம்....அழகி...

பாடியவர்கள்...கார்த்திக்...பவதாரிணி )



இப்படித்தான் ஒருமுறை அவன் ஆபீஸில்

தாளில் அவள் விழிகளை வரைந்து அதன்கீழே



"உன் கிருஸ்ணகாந்த விழிகளுக்குள் முத்தெடுக்கும் இதழ்கள்!

தேன் சொட்டிருக்கும் தேனிதழை விட சித்தமதைக் குளிரவைக்கும்

விந்தை யென்ன விந்தையடி!.."



என்று கிறுக்கியதை தற்செயலாக அந்தநேரம்வந்த டைரக்டர்

பார்த்திட்டு..



"என்னப்பா .......என்ன ....ஏதோ கிறுக்கிக்கிட்டிருக்க....

தா ....பாப்பம்"....என்று எடுத்துப்பார்த்து ......

"அறிவழகன்!.....ஐ லைக் யூ மேன்.."..



"யுவர் வைவ்ப் இஸ் வெரி லக்கிவுமன்."...

"யேஸ்....அறிவழகன்....யேஸ்....றியலி....ஸீ இஸ் லக்கி.."...



என்று அவன் முதுகைத்தட்டிக் கொடுத்த சம்பவம்...

அவனுக்கு ....இன்றுமாதிரி......இருந்தது....



"என்னங்க ......என்ன சொப்பனம்.....காப்பியோட

வந்து எத்தன நிமிடமாய்ச்சு....

நானும் பார்க்கிறேன்....ஏதோ கண்ணை மூடி ரசனையில்

இருக்கிறீங்க போல."....



"இன்னும் இறையன்புவை விட்டு இன்னும் வரலையா'...



என்று போலிக்கிண்டலாக கேட்டாள்....



அவளுக்குத்தெரியும்....அவன் நினைவுகள் தன் வசமென்பதை.....

அது புரியாமலா....இந்த இரண்டு வருட வாழ்க்கை.....



எத்தனை சுகங்கள்...எத்தனை உணர்வின் ராகங்கள்....

இணைபிரியா அந்த மனங்களுக்குள் எத்தனை

சங்கீத லயங்கள்.....



இரவென்ன ...பகலென்ன....மதியமென்ன...

சல்;லாப சரசங்கள் சுருதி விலகாத நயங்கள்.....

நினைக்கும்போது அவளுக்குள் இன்பரசம்...



"தனக்குக்கிடைத்தவன் ஓர் அற்புத இரசனை கொண்டவன்."...

என்று மனதுக்குள் நினைத்து நினைத்து இரசிப்பாள்....



அவன் குறும்புகளை அவள் இரசிக்காத நாட்களா....



யுகப்பொழுதுகளையும் கணப்பொழுதாக்கும் அவன்

வேடிக்கைகள்....நாளாந்த அவன் வாடிக்கைகள்....



காலை விடிந்தது தெரியாது சந்தோசங்கள்...

அவசரஅவசர ஆபீஸ் கிளம்புகை...திரும்பும்வரை

அவன் மறக்கமுடியாதபடி கொடுக்கும் முத்தங்கள்.....



ஒரு பெண்ணுக்கு இதைவிட என்ன வேண்டும்....

என்று அவள் போடும் கோலங்கள்....



நேரம் கிடைக்கும்போதெல்லாம்....ஏதேதோ.....

தன்மனம் போன போக்கிற்கு கிறுக்கிவைப்பாள்.....



உண்மையில்....அவை கிறுக்கல் அல்ல.....

அவள் உள்ளத்து உணர்வுகளின் வடிப்பு....அது....



"முத்தங்கள் பதிப்பாய்! சத்தமில்லாத சங்கீதம் இசைப்பாய்....

சித்தங்கள் குளிர சிந்தையை நிறைப்பாய்...இத்தனை

முத்துக்கள் சொத்தாக அத்தான்- உன்

பித்துக்குள் தளிர்க்கொடியிவள் துடிப்பதைப்பாராயோ...'



என்று கிறுக்கி விட்டு ஒருமுறை அவனுக்குத்

தெரியும்படி ட்றெஸிங் ரேபிளில் வைத்துவிட்டு

குளிக்கச் சென்றவள்....



"சட் சட்."...என்று குளியலறைக்கதவு தட்டப்படுகையில்

பயந்தபடி "யாரது.!...என்று கேட்கையில்....

"அடிமண்டு....நான்தாண்டி...கதவைத்திற."...



என்றவன் சட்டென்று அவளை அணைத்துக்கொண்டு

சந்தோஷ சங்கீதம் பாடியது அவளுக்கு பதிந்த

ஏடுகளாகி நினைவுக்கு வருகிறபோதெல்லாம்

பாடாய்ப்படுத்தும் விந்தை சொல்லிமாளுமா......



"இப்படி ஒரு கவிதை எழுதியதற்கு ஒன்றல்லவடி

ஓராயிரம் முத்தங்கள் பதிக்கலாம்" என்றவன் செய்த

குறும்புகள் அவளுக்குள் குறுகுறுப்புக்களை

கொண்டுவந்து சேர்த்துவிடும் தன்மை......



(பாடல்...புத்தம்புதியதடா.கொடுத்த முத்தம் ....

படம்...காதல் சடுகுடு..

பாடியவர்கள்....உன்னிகிருஸ்ணன்...சாதனாசர்க்கம்.)



இப்படி எத்தனையோ....எத்தனையோ....நிகழ்வுகள்...



இரசனைகள் ஒன்றிணைந்து சங்கீதம் பாடும் குயில்கள்

ஓயுமா.....கூவிக்கொண்டே இருக்குமே.....

இனிமையாகக் கூவுமே......





சட்டென்று கடிகாரச்சத்தம் அவனை சுயநினைவுக்கு கொண்டு

வந்து நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தது...



இன்னும் ஒருமணி நேரத்துக்குள் பதில் சொல்லியாக வேண்டுமே..



யாரோ தப்புச்செய்ய யாரோ தண்டனைபெறுவது என்ன நியாயம்...



ஆபீஸ் பணம் ஐம்பதினாயிரம் டொலர் கணக்கு மிஸ்...

.

அவன் அக்கவுண்டனாக சேர்ந்த காலத்திலிருந்து

அந்த ஆபீஸில் அவன் நம்பிக்கை நாணயம்

நிறைந்தவனாக எல்லோராலும் பாராட்டப்பெற்ற ஒருவன்....



அவனுடைய நேர்மை மற்றவர்களை பொறாமை கொள்ள

வைத்தாலும் ....



அவனுடைய பழைய டைரக்டர் இளைப்பாறும் வரை....

அவனை ஒன்றும் மற்றவர்களால் செய்துவிடமுடியவில்லை....



அவருக்கு அவன் என்றால் உயிர்....

நம்பி எந்தப்பொறுப்பையும் ஒப்படைத்து விடுவார்....

அவனும் கச்சிதமாக செய்து முடித்து அவரது

நம்பிக்கையைக் காப்பாற்றிவிடுவான்...



அந்த வகையில் அவனுக்கு மதிப்பு அங்கிருப்பவர்கள்

விரும்பியோ ....விரும்பாமலோ....கொடுத்தேதான் தீரவேண்டும்...

என்ற நிலையில் .....



அவனை சரியான தருணம் வரும்வரை குழிபறிக்கக்காத்திருந்தார்கள்

என்பதுதான் உண்மை...



நல்லவர்கள் நேர்மையானவர்களைக் காலமும் உலகமும்

சோதனைக்குள் தள்ளிவிடும் என்பதில் எவ்வளவு உண்மையிருக்கிறது...



போலிகளுக்கு மதிப்பளிக்கும் உலகம்......

நீலிகளுக்காக நல்லவர்களைப் பகைக்கும் உலகம்....

வேலிகளைத்தாண்டி நீளுகின்ற லஞ்சம் ........



காலிப்பயல்களை வளர்க்கும் கூட்டம்.....

இவர்களுக்கு மதிப்புக்கொடுக்கும் உலகத்தில்...

இணைந்த உள்ளங்கள்

06:00 மணி அலார்ம் அலரது...டு.டு.டு...கண்களை மெல்லமாக திறந்தேன். கடிகாரத்தை பார்த்தேன்...ம்.ம்.ம்..இன்னும் பத்து நிமிடங்கள் தூங்கலாம் என்று அலார்மை ஓப் பன்னிவிட்டு மீண்டும் எனது கண்களை மூடினேன்....


"ஐயோ..07:00 மணி ஆகிவிட்டதே...கொஞ்சம் நேரம் தானே தூங்கினேன்"...07:33க்கெல்லாம் ஸ்டேஷனில் இருக்கனுமே



"பரீட்சைக்கு லேட்டாக போகவும் கூடாது...சரி எல்லாம் அவசர அவசரமாக செய்யனும்!"



"ஏய் அனுஷா என்னடி இப்படி மூச்சு வாங்கிற?", கேட்டாள் மதுமிதா.

"ஆமா மதுமிதா, இன்று ரொம்ப லேட்டாகிவிட்டது அது தான் ரயிலைப் பிடிக்க ஓடி வந்தேன்".

"என்ன மாதிரி பரீட்சை...படிச்சியா அனு?..ம்..ம்.."என்று அனுஷா முணுமுணுத்திக் கொண்டிருந்தால்...."

சும்மா ஒரு தடவை புத்தகத்தை வாசித்தேன் அவ்வளவுத்தான்!"

"பாஸ் பண்ணுவோம் மது...இருவரும் இந்த பரீட்சையில் பாஸ்பண்ணுவோம்....", நம்பிக்கையோடு கூறினாள் அனுஷா.



காமா காமா...


எனக்கு 20 உனக்கு 18



மன்னிக்கனும்...ஆமாங்க உங்களைத்தான்...என்னுடைய கதையை கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்...ஆனால் பாருங்க என்னை இன்னும் அறிமுகம் படுத்தவில்லையே...என் பேரு அனுஷா, பல்கலைகழகத்தில் சட்டம் படித்துக்கொண்டிருக்கின்றேன்.



மதுமிதா தான் என்னுடைய உயிர்தோழி, அவளும் நானும் அதே வகுப்பில் படிக்கின்றோம்.



இதைவிட பெரிசா எதுவும்...இல்லைங்க... சரி மீதி கதைய கேளுங்க...



09:00 மணிக்கு international law படிப்பு தொடங்கப்போகின்றது.எல்லாரும் ஒரே டென்சனோடு இருக்கின்றார்கள்.



டீச்சர் பரீட்சையின் மார்க் சொல்லப்போறாங்க...



மதுவும் நானும் ஒரே பார்வையோடு மேரி டீச்சரைப் பார்த்துக்கொண்டிருந்தோம்...



மேரி டீச்சர் புள்ளிகளை சொல்ல ஆரம்பித்தார்... வகுப்பறையே அமைதியாக இருக்க...அவரது குரல் மட்டும் சத்தமாக ஒலித்தது....



சபஸ்ரியான்....6

ஹெரல்ட்........5

ஸாரா.............4

றோய்..............7

ஜெஸ்மைன்....5



என்று ரிச்சர் சொல்லிக்கொண்டே போனார்....



"என்னடி அனு இப்படி குறைவாக எடுத்து இருக்கின்றார்கள், எனக்கு இனி நம்பிக்கை இல்லைடி..இந்த பரிட்சையில் பாஸ்பண்ணாட்டி அம்மா, அப்பா என்னை ஊருக்கே அனுப்பிடுவாங்க.....நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே ஐரோப்பாவில் படிக்கின்றோம்.. இலங்கையின் படிப்பு, ஐரோப்பாவின் படிப்பு எவ்வளவு வித்தியாசமனது என்று நமக்குத்தான் தெரியும்", என்று மது கவலையோடு ரகசியமாகப் பேசினாள்...



"கொஞ்சம் பேசாம இருடி மது...எனக்கு டீச்சர் சொல்றது கேட்கவில்லை...."

என்று அவளை சமாதானப்படுத்தினேன்...



மதுமிதா..........6

அனுஷா..........9



என்று டீச்சர் சொன்னதும்...



"யெஸ்...யெஸ்...யெஸ்...என்று நாங்கள் இருவரும் சத்தம்போட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தோம்..!



எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம், சொல்லமுடியாத ஒரு சந்தோஷம்! இரவில் தூங்காமல்...படித்து படித்து....அதுவும் பரீட்சையில் பாஸ் பண்ணினால் அது ஒரு தனி சுகம் அல்லவா ! "



"வா மது....இனி நமக்கு கோடைகால விடுமுறை தொடங்கவிட்டது.

அடுத்த வருடத்திற்கு நாங்கள் பாஸ்..இனி எங்களுக்கு ஹொலிடே", என்று சந்தோஷத்துடன் நான் சொல்ல.. மது என்னைக் கட்டி அணைத்துக்கொண்டாள்....



இருவரும் சிரித்துக்கொண்டே வெளியில் சென்றோம்...



கொலேஜ் கேட்டில் ஒரே கூட்டமாக இருந்தது...

நானும் மதுவும் அங்கே சென்றோம்...

அங்கே என்னத்தான் நடக்கிறது.... கூட்டத்தை நெருங்கி போனோம்.....



அங்கே ஒரு பையனை பலபேர் சேர்ந்து அடித்துக்கொண்டிருந்தார்கள், அவனுடைய புத்தகதை பறித்து உதைப்பந்தாட்டமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்...



பார்க்க ரொம்ப கவலையாக இருந்தது... மற்ற ஸ்டூடண்ட்ஸ் அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்..



இதைப்பார்த்துக்கொண்டிருக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை...என்னை அறியாமலே...."நீங்களும் மனிதர்கள் தானே? ஏன் யாருமே உதவி செய்யமாட்டீங்களா..பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே.., சும்மா பார்த்து சிரிக்கத்தான் தெரியும் போல இந்த ஸ்டூடண்ட்ஸுக்கு". என்று எனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினேன்...



"அனுஷா பேசாமல் இரு", என்று மது மெல்லமாக சொன்னாள்..

"இந்த வம்பு உனக்கு தேவையில்லை, வா வீட்டுக்கு போவோம் இங்கே இருக்கவேண்டாம்" என்று அறிவுரை கூறினாள்...



"சும்மா இரு மது, இது உனக்கே நல்லா இருக்கா? பாவம் அவன், அவனும் நம்ம மாதிரி ஒரு மாணவன் தானே".



கூட்டம் அதிகரித்து...கல்லூரி மாஸ்டர்மார், டீச்சர் மார்கள் எல்லாரும் அங்கே வந்தார்கள்.

"இங்கே என்ன நடக்குது"? என்று கேட்டார்கள்.

"ஒன்றுமே இல்லையே"....என்று மாணவர்கள் சொன்னார்கள். "இல்லை"...என்று நான் சொன்னேன்....சொல்லும்போது மது எனது காலில் ஒரு மிதி மிதித்தாள்...அதற்கான அர்த்தம் எனக்கு புரிந்தது.. அதற்குள்..



"என்ன அனுஷா...இங்கே என்ன நடந்தது?", மாஸ்டர் என்னிடம் கேட்டார். "ஒன்றும் இல்லை மாஸ்டர்", என்று நானும் பொய் சொன்னேன்..

"எல்லாரும் வீட்டுக்கு போங்க" என்று சிசிலியா டீச்சர் கடுமையாக சத்தம் வைத்தார்...



கூட்டம் மெதுவாகக் கலைந்தது...

அப்போ அந்த மாணவர் நிலத்திலிருந்து எழும்புவதற்கு முயற்சி செய்தார்.

நானும் மதுவும் அவனுக்கு உதவி செய்தோம்...

அவனுடைய கண்ணாடியும் உடைந்துவிட்டது, உடுப்பும் ஒரே மண்ணாக இருந்தது...



"நீங்கள் அப்படி என்ன அந்த பசங்களுக்கு செய்தீர்கள்? இப்படி உங்களைப் போட்டு அடிக்கும் அளவுக்கு...", மது அவனிடம் கேட்டாள்..



"இது எல்லாம் தினமும் நடக்குதுங்க, நான் அவர்களுக்கு ஒரு விளையாட்டு பொம்மை மாதிரி, அவ்வளவுதான்", என்று அவன் கவலையாகக் கூறினான்.



கீழே கிடந்த அவன் புத்தகத்தை எடுத்த அவனிடம் தந்தேன்.

"நன்றிங்க", என்று கண்ணுக்குள் கண்ணீருடன் சொன்னான்.



"அந்த பசங்களுக்கு வேறு வேலை இல்லைப்போல அதுதான் உங்களை உதைப்பந்தாட்டம் போல உருட்டுகிறார்கள்".. அது சரி... "உங்கள் வீடு எங்கே", என்று அவனிடம் கேடேன்?



அவன் இருக்கும் இடத்தைச் சொன்னான்...



"ஓ அங்கேயா இருக்கின்றீர்கள், அப்ப எங்களுடைய வீட்டு பக்கத்தில் தான் இருக்கின்றீர்கள். அப்ப வாங்க எல்லாரும் சேர்ந்தே வீட்டுக்கு நடக்கலாமே... இல்லையா மது?", என்று அனுஷாவிடம் கேட்டேன்... சரி, என்று மது தலையாட்டினாள்...



"எனது பெயர் தீபன்.....ஓ..எனது தோழி மதுமிதா, நான் அனுஷா!"

என்று ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம்...

"இங்கே தான் நாங்களும் படிக்கின்றோம்", என்று மது கூறினாள்.



மூவரும் வீட்டுக்கு சென்றோம். தினமும் மூவரும் கதைப்போம். நட்பு மலர் எங்களுக்குள் வளர்ந்தது..



படித்தோம், சிர்த்தோம், மகிழ்ந்தோம்.

சிறிது காலத்தில் நானும், மதுவும், தீபனும் பிரிக்க முடியாத ஆறுயிர் நண்பர்களானோம்....



ஒரு நாள் நானும் மதுவும் கதைத்துக்கொண்டிருந்த போது.... "மது எனக்கு ஒன்று ஆச்சரியமாக இருக்கின்றது...என்றேன்...

என்ன அனுஷா?...சொல்லு... என்றாள் மது..

பாரு இப்ப நானும் நீயும், நமக்குள் இருக்கும் நட்பு அழமானது. இதை யாரால் பிரிக்கவும் முடியாது. நான் ஒன்று நினைத்தால் அது நீ சொல்வாய் அப்படித்தான் நம்முடைய நட்பு. நான் சோகமாக இருந்தால் நீ என் முகத்தில் சிரிப்பு என்ற பூவை வளர்ப்பாய். நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லையடி உன்னை என் தோழியாக அடைவதற்கு.", என்று என் மனதைத் திறந்து அவளிடம் பேசினேன்...



இதைக்கேட்ட மதுவின் முக்தத்தில் கண்ணீர்துளிகள்..

"ஏய் மது என்ன ஆச்சு?...



இல்லைடி நான் தான் கொடுத்துவைத்தவள் உன்னை என் நண்பியாக அடைந்தததற்கு...நட்பு என்பது எல்லாருக்கும் கிடைக்காது, நாங்கள் இருவரும் கொடுத்தவைத்தவர்கள் தான்....உண்மைத்தான்", என்று மது கூறினாள்.



ரோஜாக்களே...


பிரியமானதோழி...



10 வருடங்களுக்கு பின்.......



"ஐயோ இந்த பிள்ளையோடு நான் படும் அவஸ்தை, என்னங்க பாருங்களேன்.கடிதம் வந்திருக்கின்றது இவள் அதோடு விளையாடிக்கொண்டிருக்கின்றாள்."



"ஏய் ஷாலினிக்குட்டி அம்மா கிட்ட அந்த கடிதத்தை கொடு..."

"சரி அப்பா", என்று சொல்லி கடிதத்தை தாயிடம் கொடுத்தாள் ஷாலினி...



ஆமா யார் என்று யோசிக்கின்றீர்கள்...அபியுடைய அம்மா அனுஷா தான் லெட்டர் போட்டிருக்காள்...அனுஷாவுக்கு திருமணம் முடிந்து 3 வருடங்களாகின்றது. அவளுக்கு ஒரு பெண்குழுந்தை.

அனுஷாவும், மதுமிதாவும் வக்கீலாக வேலைசெய்கின்றார்கள். அதேப்போல் மதுமிதாவுக்கும் திருமணம் முடிந்து 3 குழந்தைகள் இருக்கின்றது.

தீபனை பற்றி ஒரு தகவலும் இல்லை. அவன் எங்கே இருக்கின்றார் என்று கூட மதுவுக்கும், அனுஷாவுக்கும் தெரியவில்லை.



அனுஷாவும் மதுவும் கொலேஜ் நாளிலிருந்து இன்று வரை பிரிக்க முடியாத தோழிகளாகவே நட்பில் தொடர்கிறார்கள்.... இருவரும் இன்னும் அதே பாசத்தோடு பழகிக்கொண்டிருக்கின்றார்கள்.



ரிங்க்...ரிங்க்...ரிங்க்...என்று தொலை பேசி அடித்தது..



"ஹெலோ...ஹெலோ மது உனக்கும் கடிதம் வந்ததா? அனுஷாவின் குரல் ஒலித்தது...

ஆமாடி பல்கலலகழகத்திலிருந்து வந்தது... என்றாள் மது...



Class '95 reunion நிகழ்ச்சி செய்யப்போகிறார்கள். சந்தோசமாக இருக்குடி" ..என்றாள் அனுஷா..



"நம்முடைய நண்பர்கள், ரீச்சர்ஸ், மாஸ்டர்ஸ் மீண்டும் சந்திக்கலாம். நாளை 18:00 மணிக்கு கொலேஜில் சந்திப்போம்"...கட்டாயம் வா...



ஓகேடி... கட்டாயம்...



மறுநாள் நிகழ்ச்சியில்...



எல்லாரும் ஒருவரையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். "ஏய் மது அந்த பக்கம் பாரேன்.. அவங்க தானே சாரா...ஹி..ஹி..வித்தியாசமே இல்லைடி", மது சிரித்துக்கொண்டு சொன்னாள்.



"Welcome everyone to the Class 1995 reunion!", நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.. அன்று அவர்களுக்குக் கற்பித்த ரீச்சர்ஸ், மாஸ்டர்மார்கள் வந்து மைக்கில் கதைத்தார்கள்.



"அன்பான மாணவ, மாணவிகளே.....இப்ப ஒரு முக்கியமான மாணவர் மேடைக்கு அன்போடு அழைக்கப்போகின்றேன்.. இவரை நாங்கள் Class of 1995 சிறந்த மாணவராக தேர்ந்தெடுத்து இருக்கின்றோம். எங்கே உங்கள் அன்பு மிக்க கரதோஷத்தினை அள்ளி வழங்குங்கள்... சிறந்த மாணவரான தீபன் அவர்களுக்கு!"



அனுஷாவும் மதுவும் வாயை திறந்துக்கொண்டே தீபனை பார்த்தார்கள். "என்னடி இது தீபனா?", அனுஷாவிடம் கேட்டாள்... மது ....



"ஓ..ஓ...நம்பமுடியவில்லையே. அப்ப அப்படி இருந்தார் இப்ப இப்படியாகிவிட்டார்ர். டையும் கோட்டும் போட்டுக்கொண்டு அழகாக இருக்கின்றார் இல்லையா", என்று மது அனுஷாவிடம் சொன்னாள்.



"அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவுத்துக்கொள்கின்றேன்", என்று தீபன் அவருடைய பேச்சை ஆரம்பித்தார்...



"கொலேஜ் வாழ்க்கை என்பது ஒரு காலம்.

அதிலே நாங்கள் நிறைய பேர்களை சந்திக்கின்றோம்.

அனைவருடைய ஆதரவுக்கு என்னுடைய கொலேஜ் காலத்தில் நான் நன்றி சொல்வதற்கு கடமைப்பற்றிருக்கின்றேன்.

எனது பெற்றோர், தங்கை, ரீச்சர்ஸ், மாஸ்டர்ஸ் எல்லோருக்கும் எனது நன்றிகள்!



எனது கொலேஜ் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு பேர் இருக்கின்றார்கள். அவர்களால் தான் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்... கொலேஜில் என்னை தினம்தோறும் அடிப்பார்கள், பசங்கள் என்னை ஒரு விளையாட்டு பொம்மையாகக் கருதி விளையாடுவார்கள்.. அப்பாவியாக இருந்த எனது புத்தக்த்தை வீசிக்கொண்டு என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்...



ஒருநாள் இதெல்லாம் எனக்கு பொறுக்காமல் போய்விட்டது. அதனால் அந்நாளில் .. இன்றோடு தற்கொலை பண்ணிவிடலாம் என்று முடிவு செய்தேன்... நான் மரணத்தை தேடும்போது இவர்கள் இருவரையும் தேவதைகள் போல் என் வாழ்க்கையில் வந்து எனக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைத்தார்கள்..



நட்பு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி.... நட்புக்கு இனம், மொழி, மதம், ஆண் பெண் பிரிவு கிடையாது! நாங்கள் பிரிந்திருந்தாலும் அந்த நட்பு மனதில் இருக்கும்! நட்பு என்பது அழியாத ஒன்று.. எனது இரு தோழிகள் எனக்கு கிடைத்திருக்காமல் இருந்தால் நீங்கள் என்னை இந்த மேடையில் உயிரோடு பார்த்திருக்கவேமுடியாது.", என்று உணர்ச்சி பொங்க...தீபன் கூற...



"யார் அவர்கள்....சொல்லுங்கள்"...."யார் அவர்கள்..சொல்லுங்கள்" .. என்று மேடையில் கூக்குரல் ஒலித்தது...



"சரி சொல்கின்றேன்", என்று தீபன் சந்தோஷத்துடன் சொன்னார்.

"அனுஷாவும், மதுமிதாவும் தான் அந்த தேவதைகள்", மகிழ்வோடு தீபன் சொன்னார்.



மகிழ்ச்சியில் அவர்களும் இருக்கைகளை விட்டு எழுந்து நின்றார்கள்...



அனுஷா.., மதுமிதா.., தீபனனயும் பார்த்து எல்லாரும் கைத்தட்டினார்கள்...மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்...



அனுஷாவுக்கும், மதுமிதாவுக்கும் இப்போ தான் புரிந்தது தீபனின் ஆழமான நட்பு....அவனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டார்கள்....



அனுஷா, மதுமிதா, தீபன்... பழைய நண்பர்கள் மீண்டும் கூடினார்கள்...

அது ஒரு மகிழ்ச்சியான பொழுது...



நட்புக்கு என்றுமே விலையில்லை... நட்பு அவர்கள் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சம்...இணைந்த உள்ளங்கள் ஒன்று சேர்ந்தன.....!!