Friday, July 16, 2010

எங்கே போனது மனித நேயம்?

குத்தி கிழித்து கொன்று தின்னும்


கொடிய விசமிகளே

கொன்றழிக்க நினைப்பது

ஈழத்தமிழனையா……? இல்லையேல்

மனித நேயத்தையா?

சொந்த மண்ணிலேயே

சொரி நாயை விரட்டுவது போல் நம்மவரா?

பிணப்பசி எடுக்கும் போதெல்லாம்

ஏப்பம் இடுவதற்கு தமிழத்தாயா…?

உலகிற்கு நீ உரைப்பது

ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்

மரணித்து நிற்கும் மனித நேயத்தையா?

வீணி சலம் ஒழுக

விரட்டுகின்றனர்

வீதி வீதியாய் அலைந்தனர்- நம்மவர்

விடிவொன்று கிட்டும் என்று

பிணமாகி போனவர்களை

நினைத்து கதறுகின்றனர்

மிகுதியாய் வதைபடுபவர்களை

நினைத்து கலங்குகின்றனர்

இதில் உலகிற்கு வெளிச்சமிடுவது

ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்

மரணித்து நிற்கும் மனித நேயத்தையா

இரத்தம் குடித்தவனை

அரியணையில் வைத்து

அழகு பார்ப்பதா நீதி?

உலகெங்கும் கை கோர்த்து

சிவப்பு கம்பளம் விரித்து

விருந்து உபசாரமாம்

தன் இரத்த உறவு என்றழைத்தவனுக்கு

கொடுத்த பரிசா? இதனால்

உள்ள தமிழனும் மெல்லச்சாகின்றான்

உலகிற்கு நீ உரைப்பது

ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்

மரணித்து நிற்கும் மனித நேயத்தையா?

தமிழ்த்தாயின் சேலை தொட்டு இழுத்து

குத்திக்கிழித்த ஆடைகளில்

இன வெறியன் விட்டுசென்ற

வடுக்கள் ஏராளம்

ஆடைகள் சுற்றப்பட்ட சலனமில்லா

உடலங்களாக பாரினில் எத்தனை பேர்

உலகிற்கு நீ உரைப்பது

ஈழத்தமிழின அழிப்பையா…… இல்லையேல்

மரணித்து நிற்கும் மனித நேயத்தையா?



- குட்டிசுபா

No comments:

Post a Comment